தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தளி பேரூராட்சியில் அளவீடு செய்து ஏழு ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

3 Jan 2026, 2:20 pm
தளி பேரூராட்சியில் அளவீடு செய்து ஏழு ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
<p><strong>தளி பேரூராட்சியில் அளவீடு செய்து ஏழு ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்</strong></p> <p>உடுமலை, ஜன.3- திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் உள்ள தளி பேரூராட்சியில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வருவாய்த் துறையால் ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப் பட்டு ஏழு ஆண்டுகள் ஆகியும், அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள் ளது. தளி பேரூராட்சி பகுதியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்லும் சாலைகள், திரைப்படப் படப் பிடிப்புகள் நடத்தப்படும் இடங்கள், அம ணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க &nbsp;அருவி, திருமூர்த்திமலை, பொதுப்ப ணித் துறை அலுவலகங்கள், உடுமலை &nbsp;ஒன்றியக் கிராமங்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யும் நீர்த்தேக்கங்கள், மீன் &nbsp;பண்ணை போன்ற முக்கிய நிறுவனங் கள் உள்ளன. மேலும், தளி பேரூராட்சி யின் வழியாக பழனி முருகன் கோயில், &nbsp;ஆழியார் அணை, வால்பாறை, ஆனை மலை, டாப்சிலிப் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்ல முடியும். இத்த கைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் &nbsp;பேரூராட்சியின் சாலைகள் குறுகலாக உள்ளன. இதனால் தொடர்ந்து போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. &nbsp;எனவே, விபத்துகளை தவிர்க்கும் &nbsp;வகையில் சாலைகளை அகலப்படுத்த &nbsp;வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் இங்கு நடைபெற்றன. பல போராட்டங்களுக்குப் பிறகு, &nbsp;கடந்த 2017 ஆம் ஆண்டு, அன்றைய &nbsp;உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில், போக்குவரத்து நெரிச லைத் தவிர்க்கும் நடவடிக்கையாக, குறுகிய சாலைகளை விரிவாக்க அள வீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டன. சாலை &nbsp;விரிவாக்கத்திற்கு ஏதுவாக வரு வாய்த்துறையினர் குறியீடுகள் இடப் பட்டன. இருப்பினும், அளவீடு செய்து &nbsp;ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை &nbsp;எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தத் தாமதம், பொதுமக்கள் &nbsp;மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனை வரின் அன்றாட வாழ்வையும் பாதிக்கி றது. வணிகர்களின் வர்த்தகத்திற்கு இடர்பாடு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, விரைவாகத் தளி பேரூராட்சி சாலைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. &nbsp;ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரி வாக்கப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் அதி காரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.