தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து நெரிசலால் திருச்சியில் விபத்துகள் அதிகரிப்பு! நடவடிக்கை கோரி சிபிஎம் போராட்டம்

7 Jan 2026, 4:05 pm
போக்குவரத்து நெரிசலால்  திருச்சியில் விபத்துகள் அதிகரிப்பு! நடவடிக்கை கோரி சிபிஎம் போராட்டம்
<p><strong>போக்குவரத்து நெரிசலால் &nbsp;திருச்சியில் விபத்துகள் அதிகரிப்பு! நடவடிக்கை கோரி சிபிஎம் போராட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஜன. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரு கில், புதன்கிழமையன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் காரணமாக சாலை விபத்து கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், அதனைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைப்பெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. &nbsp;வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். மேற்குப் பகுதிச் செயலாளர் ரபீக் அகமது வரவேற்றார். கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் எஸ். ஸ்ரீதர் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்க ராஜன், ரேணுகா, லெனின், கார்த்தி கேயன், சந்தானம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய &nbsp;மக்கள் கட்சி, சிபிஐ(எம்எல்), மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, சர்வீஸ் ரோடு மீட்புக் குழு வினர் மற்றும் தோழமைக் கட்சியினர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழுச் செய லாளர்கள் கலந்து கொண்டனர். பாலக்கரை பகுதிச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.