தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Jan 2026, 3:41 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஜன.13இல் போக்குவரத்து மாற்றம்

நாமக்கல், ஜன.9- போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாமக்கலில் ஜன.13 ஆம் தேதி போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாநகராட்சி பழைய பேருந்து நிலை யத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவ ரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநக ராட்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக திருச்சி, துறையூர் மற் றும் இதர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகின்ற ஜன.13 ஆம் தேதி முதல் தற் காலிகமாக பழைய பேருந்து நிலையத்திற்குள் கடை வீதி பிரதான சாலை பழைய சிங்கப்பூர் ஸ்டுடியோ அருகில் உள்ள நுழைவாயில் வழியாக உள் நுழைந்து நேரம் காப்பாளர் அறை அருகில் உள்ள வாயில் வழி யாக வெளியேறும். இதனால் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து திருச்சி, துறையூர் மற்றும் இதர பகுதி களுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் பழைய பேருந்து நிலையத்தின் உட்புறம் இருந்தே பேருந்து களில் பயணிக்குமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு: அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல், ஜன.9- குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜல்லிக் கட்டு போட்டி ஜன.25 ஆம் தேதி வளையக்காரனூர் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் நடை பெற உள்ளது. இங்கு திருச்செங்கோடு கோட்டாட்சி யர் லெனின் தலைமையில், பள்ளிபாளையம் துணை  காவல் கண்காணிப்பாளர் கவுதம், வட்டாட்சியர் பிர காஷ், காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் கால்நடை உதவி இயக்குநர், வட்டார போக்குவரத்து அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், தீயணைப்பு ஆய்வா ளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.

இழப்பீடு இழுத்தடிப்பு: பேருந்து ஜப்தி

கோவை, ஜன.9- அரசுப் பேருந்து மோதி கால்களை இழந்த தூய் மைப் பணியாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய் யப்பட்டது. கோவை, புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த வர் விஜயகுமார் (46), தூய்மைப் பணியாளர். இவர் கடந்த 2022 நவம்பர் 22 ஆம் தேதியன்று அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து விஜயகுமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட் டார்.  இதையடுத்து அவரது கால் செயலிழந்ததாக மருத்துவர்கள் கூறியதால், முழங்கால் வரை அவரது கால் அகற்றப்பட்டது.  இதனால் வேலைக்குச் செல்ல  முடியாமல் சிரமப்பட்ட விஜயகுமார், கோவை நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை  விசாரித்த ஜே.எம் சி.ஓ.பி நீதிமன்றம் விஜயகுமா ருக்கு ரூ.23.90 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து இழப்பீடு வழங்காததால், மீண்டும் அரசு போக்குவரத்துக் கழ கத்திற்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்தார். புதனன்று மனுவை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி, காந்திபுரம் -  வெள்ளிங்கிரி செல்லும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பேருந்து நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கப்பட்டது.

தாமிர கம்பி திருட்டு: 4 பேர் கைது

நாமக்கல், ஜன.9- ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோலார் பேனல் தாமிர கம்பிகளை திருடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத் துள்ள வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் சோலார் பேனல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் இடத்தில், கடந்த சில தினங்களாக தாமிர கம்பிகள் திருடு போவதாக சோலார் பேனல் நிறுவன உரிமையா ளர்கள் வெப்படை காவல் நிலையத்தில் புகாரளித்த னர். இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் கௌதமன் உத்தரவின் பெயரில், வெப்படை காவல் ஆய்வாளர் சங்கீதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோலார்  பேனலில் உள்ள தாமிர கம்பிகளை திருடி, அதை உருக்கி வெளியிடங்களில் விற்பனை செய்து வந்த  வெப்படை பகுதியை சேர்ந்த சஞ்சய் (25), எடிசன் (45), ஆரோன் (24), சுபாஷ் (25) ஆகியோரை வியாழ னன்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிட மிருந்து 160 கிலோ எடை கொண்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமிர கம்பிகள், ஜீப், சரக்கு  ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குமாரபாளையம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசுப்பள்ளியில் விளையாட்டு பூங்கா திறப்பு

சேலம், ஜன.9- சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான  அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள விளையாட்டு பூங்காவினை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், கொண்டப்ப நாயக் கன்பட்டி செவித்திறன் குறைபாடுடைய வர்களுக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் குமரன் அப்பு சாமி நினைவு விளையாட்டு பூங்கா திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. சுற்று லாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு, பூங்காவை திறந்து வைத் தார். அப்போது அவர் பேசுகையில், இப் பள்ளியில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 100 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் அளவில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு, 45  மாணவ மாணவிகளுக்கு 8 சிறப்பு ஆசிரி யர்கள் மூலம் கல்வி பயில வழிவகை செய் யப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள பூங்கா, மாற்றுத்திறனாளி மாணவ, மாண வியர்கள் விளையாடும் வகையிலான விளை யாட்டு உபரணங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்து, என்றார். இதன்பின் மாணவர்க ளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங் கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பொ.செண்பக வள்ளி, மாவட்ட நீதிபதி (ஓய்வு) வேணுகோ பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.