தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தை செயல்பட வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

13 Feb 2026, 5:58 pm
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தை செயல்பட வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!
<p><strong>தருமபுரி பழைய பேருந்து நிலையத்தை செயல்பட வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!</strong></p> <p>தருமபுரி, பிப்.13- தருமபுரி பழைய பேருந்து நிலையத்தை செயல்பட வைக்க &nbsp;பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு, அதில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு &nbsp;வியாபாரிகள் நன்றி தெரிவித்த னர். தருமபுரி நகரின் மையப்பகுதி யில் பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம் 5.75 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகி றது. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக் கும் அரசு மற்றும் தனியார் பேருந் துகள் இயக்கப்பட்டன. இந்நிலை யில், நகர மக்கள்தொகை பெருக் கத்திற்கேற்ப, போதிய வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக் கவும், நகரில் வாகனப் போக்குவ ரத்து நெரிசலை தவிர்க்கவும் தரும புரி புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றி வேறு இடத்தில் புதிதாக &nbsp;கட்டப்படும் என அறிவிக்கப்பட் டது. தனியார் பங்களிப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப் படும் என்ற அறிவிப்பிற்கு வியாபா ரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி நகராட்சி நிர்வாகம் தருமபுரி பென்னாகரம் சாலையில், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில், ரூ.39.14 கோடியில் நகராட்சிக்கு தனியார் வழங்கிய நிலத்தில் அரசு &nbsp;தனியார் பங்களிப்புடன் புதிய &nbsp;பேருந்து நிலையம் அமைக்கப்பட் டது. திறப்பு விழா முடிந்தபின்பு அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக் கப்பட்டது. இதனால் பழைய &nbsp;பேருந்து நிலையம் வெறிச்சோடி யதால், வியாபாரிகள் வருமான மின்றி தவிப்புக்குள்ளாகினர். இது குறித்து பழைய பேருந்து நிலைய வியாபாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரை சந்தித்து தங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப்படு வதை தெரிவித்தனர். பழைய &nbsp;பேருந்து நிலையத்தில் உள்ளூர், &nbsp;வெளியூர் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வா கத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் வலி யுறுத்தினர். அதனையேற்று திருப் பத்தூர், அரூர் பாப்பிரெட்டிபட்டி, சேலம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி இயக்கப்படும் என மாவட்ட நிர்வா கம் அறிவித்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க நகரச் செயலா ளர் எஸ். நிர்மலாராணி ஆகியோரை சந்தித்து வியாபரிகள் நன்றி தெரி வித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.