தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தை இயக்க கோரிக்கை

7 Feb 2026, 5:37 pm
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தை இயக்க கோரிக்கை
<p><strong>வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தை இயக்க கோரிக்கை</strong></p> <p>தருமபுரி, பிப்.7- &nbsp;தருமபுரி நகரின் மையப்பகுதி யில் 5.75 ஏக்கர் பரப்பளவில் 1980-ஆம் ஆண்டு முதல் பி.ஆர். ராஜகோபால் பேருந்து நிலையம் இயங்கி வந்தது. ஓசூர், சேலம், &nbsp;கோவை, சென்னை, பெங்களூரு &nbsp;உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு &nbsp;இங்கிருந்து பேருந்துகள் இயக்கப் பட்டு வந்தன. போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்கவும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்தவும் புதிய &nbsp;புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என 10 ஆண்டுக ளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. கடந்த 2017-இல் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில், அரசு மற்றும் தனியார் பங்க ளிப்புடன் (PPP model) புதிய &nbsp;பேருந்து நிலையம் கட்டப்படும் என அப்போதைய முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நகராட்சியே இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. எனினும், தருமபுரி - &nbsp;பென்னாகரம் சாலையில் உள்ள &nbsp;ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் 10 &nbsp;ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டு, ரூ.39.14 கோடி மதிப்பில் &nbsp;கட்டுமானப் பணிகள் நிறைவுற் றன. புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு ஒருநாள் முன்புதான், அனைத்துப் பேருந்து களும் புதிய நிலையத்திலிருந்து இயங்கும் என மாவட்ட நிர்வாகம் &nbsp;அறிவித்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் திடீரென வெறிச்சோடியது. புதிய மற்றும் பழைய பேருந்து &nbsp;நிலையங்களுக்கு இடையே 5 கி.மீ &nbsp;தொலைவு உள்ளதால், போதிய நகரப் பேருந்து வசதியின்றி மாண வர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் &nbsp;வெளியூர் பயணிகள் கடும் அவதிக் குள்ளாகினர். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட &nbsp;நகராட்சி கடைகள் மற்றும் நூற்றுக் கணக்கான சாலையோரக் கடை கள் இருந்தன. தற்போது பேருந்து கள் வராததால் இவர்களின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகியுள் ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தனியார் பங்களிப் புடன் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் பராமரிப்பு 23 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய பேருந்து நிலை யத்தில் கடைகளை ஏலம் எடுப் பதில் பெரும் பணம் படைத்தவர்க ளுக்கே முன்னுரிமை அளிக்கப்ப டுகிறது. பழைய பேருந்து நிலைய &nbsp;வியாபாரிகளுக்கு அங்கு கடை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து பழைய பேருந்து &nbsp;நிலைய வியாபாரிகள் மற்றும் &nbsp;சமூக ஆர்வலர்கள் கே.சலீம், பி. என்.வெங்கடேஷ், வியாபாரிகள் சங்கத் தலைவர் பாபு ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் &nbsp;இரா.சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாதர் சங்க நகரச் செயலாளர் எஸ்.நிர்மலாராணி ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்து தங்க ளின் கோரிக்கைகளை எடுத்துரைத் தனர். மேலும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பழைய பேருந்து நிலை யத்தை கடந்து செல்லும் திருப் பத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, &nbsp;சேலம், திருவண்ணாமலை ஆகிய &nbsp;ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.