தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து இயக்கக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

31 Mar 2026, 4:50 pm
பழைய பேருந்து நிலையங்களிலிருந்து  பேருந்து இயக்கக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பழைய பேருந்து நிலையங்களிலிருந்து&nbsp;பேருந்து இயக்கக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>மயிலாடுதுறை, மார்ச் 31- &nbsp;மயிலாடுதுறையில், பேருந்து நிலையம் மணக்குடி பகுதிக்கு மாற்றப்பட்டதால் நகரப் பகுதிகள் மற்றும் நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். &nbsp;தற்போது நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகள் முடியும் வரை, ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்கக்கோரி தரைக்கடை வியாபாரிகள் சங்கம்(சிஐடியு) சார்பில், கிட்டப்பா அங்காடி அருகில் &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் டி. துரைக்கண்ணு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜி. ரவி, நகரச் செயலாளர் ஏ.ஆர். விஜய் மற்றும் சிஐடியு தரைக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். &nbsp;புறவழிச்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க வேண்டும். மணக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள், சிறு கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்,</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.