தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதாக வியாபாரிகள் புகார்

23 Mar 2026, 3:39 pm
நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதாக வியாபாரிகள் புகார்
<p><strong>நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதாக வியாபாரிகள் புகார் </strong></p> <p>தென்காசி, மார்ச் 23- தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நடைபாதை கடைகளை அப்புறப்படுத்துமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்துவதாக &nbsp;வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ், மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன் &nbsp;சந்தித்து பேசினர். அப்பேது அவர்கள் கூறியதாவது: &nbsp;ஏற்கனவே தென்காசி பகுதி குத்துக்கல்வலசையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடைகளை அப்புறப்படுத்துவத்தை கண்டித்து நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 23 திங்களன்று காலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கடைகளை அப்பு றப்படுத்த வேண்டும் என வியாபாரிகளிடம் கூறினர். பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதி தென்காசி புதிய பேருந்து நிலையம் ஆகும். இதனை ஒட்டி உள்ள சாலையின் அருகில் பூ வியாபாரம், பழ வியாபாரம், கரும்பு சாறு வியாபாரம் செய்வதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். லத்திகா என்ற பெண் வியாபாரி கடந்த 5வருடங்க ளாக இங்கு வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையை திடீர் என்று அப்புறபடுத்த சொல்வதால் அவர்க ளின் குடும்பம் பெரிய அளவில் பாதிக்கும். இதுபோன்ற நிலையில்தான் மேலும் பலர் உள்ளனர். ஆகையால் சாலையோர வியாபாரிகளை நெடுஞ்சாலைத் துறை யினர் அப்புறப்படுத்துவதை &nbsp;நிறுத்த வேண்டும் எனவும். மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினர்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.