அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்! வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு வலியுறுத்தல்
7 May 2026, 2:15 am

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்! வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, மே 6- அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு வலியுறுத் தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 43ஆவது வணிகர் தின மாநாடு “சுதேசி வணிகம், சுய தொழில்கள் காப்போம்” என்ற தலைப்பில் கன்னியா குமரியில் சுதேசி நாயகன் த.வெள்ளையன் நினைவு திடலில் செவ்வாயன்று (மே 5) நடைபெற்றது.

மாநிலத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் (எ) ராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மெஸ்மர்காந்தன் வெள்ளை யன் வரவேற்றார்.

தேசியக் கொடியை எப்.எம்.செல்வ ராஜ் ஏற்றினார். வணிகக் கொடியை பூஜிதகுரு பால பிரஜாதிபதி அடிகள் ஏற்றி னார்.

தங்கம் வெள்ளையன், எஸ்.கிருஷ்ணபாய் சவுந்த ரராஜன், ஜெ.ஹெலன் டேவிட்சன், சீதாபதி, பா.விநாயகமூர்த்தி ஆகி யோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கே.ஆர்எம்.ஆர். குரூப் நிறுவனங்களின் சேர்மன் சி.நேப்பால்ராஜ் த.வெள்ளையன் படத்தை திறந்து வைத்தார்.

மாநில பொருளாளர் எஸ்.பீர் முகமது வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித் தார்.

பாரத் உத்யோக் வியா பார் மண்டல் தேசிய தலை வர் ஆர்.பாபுலால் குப்தா, தேசிய செயலாளர் முகுந்த் மிஸ்ரா, தமிழ் தேசிய பேரவை தலைவர் பெ.மணி யரசன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலை வர் இரா.அன்பழகனார், டெல்டா காவேரி கூட்டு இயக்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி, பேராசிரியர் பாத்திமா பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

“வணிகமும் ஜிஎஸ்டி யும்” என்ற தலைப்பில் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், “வணிகமும் - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும்” என்ற தலைப்பில் ஜெ.அர்னால்ட் அரசு, “வணிகமும் - பிளாஸ்டிக் பொருள்” என்ற தலைப்பில் ஜி.சங்கரன், “வனிகமும் - தொழிலாளர் நலம்” என்ற தலைப்பில் ஏ.பி.எஸ்.ஆண்றோ ஆகியோர் பேசினர்.

தீர்மானங்கள் அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், வணிகர்கள் அவர்களது உரிமை களுக்காக சிறை சென்று உரிமைகளை மீட்டெடுத்த தினமான மே 5 தினத்தை தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக வணிகர் தினமாக அறிவிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளால் பல்வேறு கட்டங்களில் அபரி மிதமாக உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் கோடிக்கு மேல் அதிகமாக உள்ள நிலையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் முழுமை யான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் பொருட் களை சேவை வரி சட்டத் திற்குள் கொண்டுவர வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி இ-இன்வாய்ஸ் முழுமை யாக ரத்து செய்யப்பட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளையும் அனைத்து பிராந்திய மொழி களிலும் வெளியிடப்பட வேண்டும்.

உயர்நீதிமன்றம் 31.1.2024இல் மறுசுழற்சிக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொரு ட்களை உற்பத்தி செய்யலாம் என தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசு மறுசுழற்சிக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொரு ட்கள் தயாரிக்க நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதி வழங்கி, அதை நம்பியுள்ள பல ஆயிரக் கணக்கான குடும்பங் களுக்கு வாழ்வளிக்க வேண்டும்.

எடையளவுகள் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி எடையளவுகள் மறு முத்தி ரையிடும் கால அளவை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.

மின் பகிர்மான கழக சட்ட விதிகளின் பீக் ஹவர் கட்டணம், பவர் ஃபேக்டர் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்.

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் செலுத்த இயலா மல் நிலுவையில் உள்ள வங்கி கடன் நிலுவை தொகையை நிபந்தனை யின்றி ரத்து செய்ய வேண்டும்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க பழைய ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதில் மாநில அமைப் பாளர் எல்.எம்.டேவிட்சன், மாநில செயல் தலைவர்கள் வியாசை எம்.மணி, பா.விநா யகமூர்த்தி, சிவசக்தி ஜி.ராம நாதன், கே.எம்.தேவ ராஜ், துணைப் பொதுச்செய லாளர் பி.வி.கருணாகரன், செய்தி தொடர்பாளர் ஏ.ஆல்பர்ட் அந்தோணி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ப.தேவராஜ், செய லாளர் வி.பி.திருஞானம், பொருளாளர் புரசை பி.குமார் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.