பல்லாவரம் வாரச்சந்தையை பாதுகாக்க கோரி வியாபாரிகள் சங்கம் கையெழுத்து இயக்கம்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பல்லாவரம் வாரச்சந்தையை பாதுகாக்க கோரி வியாபாரிகள் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p>
<p>சென்னை, நவ. 15 - பல்லாவரம் கன்டோன் மெண்ட் வாரச்சந்தையை பாதுகாக்க வேண்டுமென்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் வாரச் சந்தை 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாயந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு திரிசூலம் - பல்லாவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சாலைக்கு மாற்றப்பட்டது. கன்டோன் மெண்ட் நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இந்த இடத்தில் 15 வருடங்களாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தை யில் 1200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். கன்டோன் மெண்ட் நிர்வாகம் நிர்ண யித்த வாடகையை வியா பாரிகள் முறையாக செலுத்தி வருகின்றனர். இந்த சந்தை நடை பெறும் இடத்தில் மேம்பாலம் அமைக்க உள்ளதாக கன்டோன்மெண்ட் நிர்வாகம் தெரிவித்தது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி கை விடப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளது. இருப்பினும், வியாபாரிகளிடையே அச்சம் நிலவுகிறது. வாரச் சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரம், சந்தையை பாதிக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (நவ.14) பல்லாவரம் கன்டோன்மெண்ட் வார சந்தை சிறு வியாபாரிகள் நலச்சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தியது. சங்கத்தின் தலைவர் ஒய்.இஸ்மாயின், செயலாளர் ஜி.பூமிநாதன், பொரளாளர் பி.அஷ்ரப்அலி, நிர்வாகி பி.முருகன் உள்ளிட்டோர் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.</p>
<p> </p>
