தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

31 Jan 2026, 5:27 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை  திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
<p><strong>உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை &nbsp;திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், ஜன.31- அரசியல் சட்டத்திற்கு விரோத மாக தொழிற்சங்கங்களையும், குறைந்தபட்ச ஊதியங்களையும் அவமரியாதை செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய உச்ச &nbsp;நீதிமன்ற தலைமை நீதிபதி தனது &nbsp;கருத்துக்களை திரும்பப்பெற வேண் டும் என்று திருப்பூர் அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டம் சனி யன்று எம்.எல்.எப் மாவட்ட அலுவல கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்கு எம்எல்எப் மாவட்டச் செயலா ளர் சக்திவேல் தலைமை தாங்கினார். &nbsp;ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா ளர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலை வர் கே. உன்னி கிருஷ்ணன், எல். பி.எப் மாவட்ட துணைத்தலைவர் &nbsp;ரங்கசாமி, ஐஎன்டியுசி மாவட்டச் &nbsp;செயலாளர் வி.ஆர்.ஈஸ்வரன், &nbsp;எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் &nbsp;முத்துசாமி யூடியுசி மாவட்டச் செய லாளர் சதீஷ்சங்கர், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் கலந்து &nbsp;கொண்டனர். &nbsp;இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: இந்திய உச்ச &nbsp;நீதிமன்ற தலைமை நீதிபதி குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள் செயல்பாடு ஆகியவற்றை அவ மதிக்கும் விதத்தில் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளார். இது, அரசியல் சாசனத் தையும், இதுவரை உச்சநீதிமன்றம் தந்துள்ள ஏராளமான தீர்ப்புகளை யும் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்ற பொருளை கொண்டதாகும். இந்திய அரசியல் சாசணத்தின் 21 ஆவது பிரிவு, இந்திய குடிமக்க ளின் கண்ணியமான வாழ்வை உறு திப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு &nbsp;கட்டளை இடுகிறது. இதனை மட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் 14, &nbsp;23, 39(டி), 43 ஆகிய பிரிவுகளை யும், ஊதியத்துடன் தொடர்புபடுத்தி இதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் பல &nbsp;தீர்ப்புகளை தந்துள்ளது. அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு பதவியேற்ற தலைமை நீதிபதி, மனுஸ்மிருதியை படித்து தீர்ப்பு எழுதுகிறாரா? என்ற அச்சம் &nbsp;எழுகிறது. அவர் கருத்து தொழிற் சங்கங்களின் ஜனநாயக செயல்பாட் டுக்கும், தொழிலாளர் நலனுக்கும் &nbsp;எதிரானது. ஆகவே அவர் கருத்தை &nbsp;திரும்ப பெற வேண்டும் என்று &nbsp;அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி உள்ளன. மறியல் போராட்ட தயாரிப்பு பிப்ரவரி 12ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்து பிப்ரவரி 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் இருசக்கர &nbsp;வாகனத்தில் சென்று துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் மேற்கொள்வது, 8, 9 தேதியில் வேன் மூலம் ஒலி பெருக்கி வைத்து பிரச்சாரம் மேற் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது. பிப்ரவரி 12 வேலைகளை நிறுத்தி விட்டு திருப்பூரில் ரயில் மறியலில் &nbsp;ஈடுபடுவது, மேலும் திருப்பூர் மாவட் டத்தில் அவினாசி, ஊத்துக்குளி, காங் கயம், &nbsp;தாராபுரம், உடுமலைப் பேட்டை, பல்லடம் ஆகிய பகுதிக ளில் மத்திய அரசு அலுவலகங்கள் &nbsp;முன்பு மறியல் போராட்டம் நடத்து வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.