20 % சம்பள உயர்வை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு; மீண்டும் ஜன.19 இல் பனியன் பேச்சுவார்த்தை
26 Dec 2025, 4:32 pm
<p><strong>20 % சம்பள உயர்வை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு; மீண்டும் ஜன.19 இல் பனியன் பேச்சுவார்த்தை</strong></p>
<p>திருப்பூர், டிச. 26 - திருப்பூரில் பனியன் தொழிலா ளர்களுக்கு 20 சதவிகிதம் சம்பள உயர்வு தருவதாக உற்பத்தியாளர் தரப்பில் முன்மொழியப்பட்டது. ஆனால் மற்ற அனைத்து தொழில்க ளிலும் ஒரு நாள் ஊதியம் குறைந்தபட் சம் ரூ.1000 ஆக இருக்கும் நிலையில் 20 சதவிகித உயர்வு என்பதை ஏற்க முடியாது என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் நிராகரித்து விட்டனர். இதையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி அன்று நடத்துவதென இருதரப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று பனி யன் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உற்பத்தியா ளர்கள் தரப்பில் கே.எம்.சுப்பிரமணி, திருக்குமரன், கோபாலகிருஷ்ணன் (ஏற்றுமதியாளர் சங்கம்) சண்முக சுந்தரம், தாமோதரன் (சைமா), சக்தி வேல் (டீமா), மார்ஸ் கிருஷ்ணன் (டெக்மா), விவேகானந்தன் (சிம்கா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் ஜி. சம்பத், கே.உண்ணிகிருஷ்ணன் (சிஐ டியு), செந்தில், சேகர் (ஏஐடியுசி), ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணி யம் (எல்பிஎப்), வி.ஆர்.ஈஸ்வரன், சீனிவாசன் (ஐஎன்டியுசி), ஆர்.முத்து சாமி (எச்எம்எஸ்), கண்ணபிரான் (ஏடிபி), சக்திவேல் (எம்எல்எப்), சந் தானம், செந்தில் (பிஎம்எஸ்), மனோ கரன் (டிடிஎம்எஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐந்தாவது முறையாக இப்பேச் சுவார்த்தை நடைபெற்றது. இதில் 17 அம்சக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர் கள் தரப்பில், சம்பள உயர்வு 20 சத விகிதம் தருவதாக முன்மொழிந்த னர். இத்துடன் டிஏ உயர்வுக்கு சிறப்பு ஆலோசகரை கேட்டுச் சொல்வதா கவும், இலவச பஸ் பயணம் இருப்ப தால் பயணப்படி உயர்த்தி தர முடி யாது, பிரசவ கால விடுப்பு 6 மாத காலம் கேட்கப்பட்டிருப்பதற்கும், ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யும் கோரிக்கை குறித்தும் பதிலளித்த உற்பத்தியா ளர்கள் தரப்பில், ஈஎஸ்ஐ மருத்துவ வசதி இருப்பதால் இந்த இரு கோரிக் கைகளையும் ஏற்க முடியாது என்று ெதரிவித்தனர். ஓவர்டைம் படி ரூ.30 ஆக இருப்பதை ரூ.60 ஆக (100 சத விகிதம்) உயர்த்தித் தருவதாக தெரி வித்தனர். இது தவிர இதர கோரிக்கை கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்ட உரிமைகளை அமலாக்கு வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு சிஐடியு தரப்பில் பதில ளிக்கையில் சட்ட உரிமைகள் என்பது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது, இதில் விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. அதேபோது மற்ற அனைத்து முறை சாரா தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களிலும் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் ரூ.1000 என்ற அளவில் இருக்கும் போது பனியன் தொழிலாளிக்கு தற்போது வழங்கும் ஊதியத்தில் 20 சதவிகிதம் உயர்த்தித் தருவதாக கூறு வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதேபோல் டிஏ உயர்விலும் வழக்கமான நடைமுறை இருக்கும்போது, சிறப்பு ஆலோசகரி டம் கலந்து தெரிவிப்பதாகக் கூறு வதையும் ஏற்க முடியாது.கட்டாயம் டிஏ உயர்வை கொடுக்க வேண்டும். பயணப்படி உயர்த்தித் தர முடியாது என்பதை ஏற்க முடியாது. விடியல் பேருந்து பயணம் என்பது அரசின் திட் டம், இதிலும் பெண்கள் மட்டுமே பயனடைய முடியும். நடைமுறை யில் அதிலும் பல சிரமங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆண் தொழிலா ளர்கள் உட்பட அனைவருக்கும் பய ணச் செலவு அதிகரிக்கும் நிலையில் பயணப்படி உயர்த்தித் தருவதை மறுக்கக் கூடாது. 100 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், அமலாக்கப்பட்டால், மகப் பேறு நல உதவி, முழு உடற் பரிசோ தனை பற்றிய கோரிக்கை எழாது. ஆனால் சரி பாதி தொழிலாளர்க ளுக்கு இஎஸ்ஐ., பிஎப் இல்லாத நிலையில் மகப்பேறு நல உதவி, உடற்பரிசோதனைக்கு நிர்வாகங் கள் கட்டாயம் பொறுப்பேற்க வேண் டும். வீட்டு வாடகைப்படி பற்றி உற் பத்தியாளர்கள் கட்டாயம் உறுதிய ளிக்க வேண்டும் என்றும் தொழிற் சங்க தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாத நிலையில், இருத ரப்புப் பேச்சுவார்த்தையை ஜனவரி 19 அன்று ஆறாவது முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
