தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

19 May 2026, 12:47 am
எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து  அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

​​​​​​​தருமபுரி, மே 18- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் தழுவிய அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் திங்களன்று நடைபெற்றது.

ஒன்றிய மோடி தலைமையிலான அரசு, ஐந்து மாநில தேர்தல் முடிந்தவு டன் எரிபொருட்களின் விலையை கடு மையான உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக அணைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து தொடர் போராட்டங்களை மேற்கொள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத் திருந்தது. இதனையேற்று தமிழகத்தில் பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகரா சன் தலைமை வகித்தார். இதில், சிஐ டியு மாவட்டப் பொருளாளர் எஸ்.சண்மு கம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. மணி, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, மாவட்ட கவுன்சில் செயலா ளர் சன்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், செயலாளர் சண் முகம், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் தாமோதிரன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஈரோடு ஈரோட்டில் ஜவான்பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், ஏஐடியுசி ஸ்டாலின் சிவகுமார், எல்பிஎப் கே.எஸ். தமிழ்செல்வன், எச்எம்எஸ் ஜீவா சண்மு கம், எம்எல்எப் காளிமுத்து, எல்எல்எப் பாருக் ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.

இதில் திரளானோர் பங்கேற்றனர். கோவை கோவையில், ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் சி.தங்கவேல் தலைமை ஏற்றார். இதில், எச்எம்எஸ் மாநில செயல் தலைவர் டி.எஸ்.ராஜா மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலு சாமி, எச்எம்எஸ் ஜி.மனோகரன், எல்பிஎஃப். துரை ராக்கிமுத்து உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எஸ்.கே தியாகராஜர் தலை மையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.

உதயகுமார், மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, துணைத் தலைவர் ஆர். வெங்கடபதி, ஏஐடியூசி மாவட்டச் செய லாளர் சம்பத், எல்பிஎப் செயலாளர் பழ னியப்பன், யூடியுசி சார்பில் ராஜேந்தி ரன், ஐஎன்டியூசி நடராஜன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தன சேகரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் கலைவாணன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், யூடியூசி மாவட்டச் செயலாளர் வி.பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி மாநில இணை பொது செயலாளர் என்.

முருகராஜ், எம்.எல்.எப் மாநிலச் செய லாளர் என்.எஸ்.ரங்கசாமி, யூடியூசி மண்டலச் செயலாளர் தண்டபாணி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி ஆகியோர் பேசினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.