தொழிலாளர்கள் மீது பாஜக அரசுகள் நடத்தும் அடக்குமுறை தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
12 May 2026, 11:40 pm

தொழிலாளர்கள் மீது பாஜக அரசுகள் நடத்தும் அடக்குமுறை தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 12 - வட மற்றும் மத்திய இந்தியாவில் உழைக்கும் தொழிலாளர்கள் மீது பாஜக அரசுகள் ஏவிவிடும் அடக்கு முறைகளைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வா யன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரி யானா மாநில அரசுகள், போராடும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தல், கைது நட வடிக்கைகள் மற்றும் கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டு வரு கின்றன.

இந்த ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டித்தும், தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனொரு பகுதியாக, சென்னை யில் செவ்வாய்க்கிழமை (மே 12) அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச பேரவை தலைவர் கி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வம், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் எம்.

இராதா கிருஷ்ணன், சுப்பிரமணியம் பிள்ளை (எச்எம்எஸ்), இரணியப்பன் (ஏஐசிசி டியு), சேக்கிழார் (யுடியுசி), கோவிந்த ராஜ் (டபுள்யுபிடியுசி), சுகுமாரன் (ஐஎ ன்டியுசி), மோகன்ராஜ் (ஏஐயுடியுசி), மாயாண்டி (டியுசிசி), பேரறிவாளன் (எல்எல்எப்), எஸ். பாலசுப்பிரமணியம் (சிஐடியு), சுந்தரமூர்த்தி (எல்பிஎப்) உள்ளிட்டோர் அடக்குமுறைகளைக் கண்டித்துப் பேசினர்.

தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் மாநில அரசுகளைச் சாடினர்.

எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி, ஐஎன்டி யுசி உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தொழி லாளர் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகச் சென்னையில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.