தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெறு ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்

22 Nov 2025, 3:59 pm
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெறு ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்
<p>நாமக்கல், நவ. 22- ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிய, தொழிலாளர் &nbsp;விரோத நான்கு புதிய தொழிலா ளர் நல சட்டத் தொகுப்புகளை உட னடியாகத் திரும்பப் பெற வேண் டும் என &nbsp;வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சனி யன்று பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதிய தொழிலாளர் நல சட்டங் களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசு நவம்பர் 21ஆம் தேதியன்று முதல் இச்சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும், சங்கம் வைக்கும் உரிமைகளைப் பறிக்கும்,</p> <p>மேலும், பெரிய தொழிற் சாலைகளில் இருந்து தொழிலாளர் களை வெளியேற்றும் அபாயத்தை &nbsp;ஏற்படுத்தும் என்றும், இது &lsquo;உழைப் புச் சுரண்டலை&rsquo; உருவாக்கும். தொழிலாளர் நலனுக்கு எதி ரான இச்சட்டங்களை உடனடியா கத் திரும்பப் பெற வேண்டும் என்று &nbsp;வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் &nbsp;தன்னெழுச்சியான போராட்டங்கள் &nbsp;நடைபெற்று வருகிறது. &nbsp;இதன்ஒருபகுதியாக, நாமக் கல் பூங்காச் சாலை முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி. தனசேக ரன் தலைமை வகித்தார்.</p> <p>இதில், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம். அசோ கன், மாவட்டச் செயலாளர் ந. வேலு சாமி, ஐஎன்டியூசி மாவட்டச் செய லாளர் பழனிவேல், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் வெங்கடே சன், யுடியுசி மாவட்டச் செயலாளர் &nbsp;பழனிசாமி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் இராமகிருஷ்ணன், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் எம். &nbsp;செங்கோடன், துணைச் செயலாளர் &nbsp;சு. சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை இதேபோன்று கோவை குறிச்சி சிப்காட் வளாகம் முன்பு சிஐடியு &nbsp;டி.பாலன் நினைவு இன்ஜினியர் சங் கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி. பாலன் நினைவு இன்ஜினியர் சங்க &nbsp;பொதுச் செயலாளர் கே.மாரி முத்து, பொருளாளர் கண்ணுச் சாமி, துணைத் தலைவர் சசிகுமார் &nbsp;ஆகியோர் கண்டன உரையாற்றி னார். இதில், ஏராளமானோர் கலந்து &nbsp;கொண்டனர். ஈரோடு ஈரோட்டில் ஜவான்ஸ் பவன் &nbsp;முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஏஐடியுசி நிர்வாகி எம்.குணசேகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், எச்எம் எஸ் நிர்வாகி ஜீவா பி.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிஐடியு நிர்வாகிகள் எச்.ஸ்ரீராம், என்.முருகையா, சி. ஜோதிமணி, செந்தில்குமார், கே. பிஜு மற்றும் பொருளாளர் வி. சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.