தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீடித் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தொகுப்பு தொழிற்சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்த முடிவு!

30 Nov 2025, 4:29 pm
பீடித் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தொகுப்பு  தொழிற்சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்த முடிவு!
<p><strong>பீடித் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தொகுப்பு &nbsp;தொழிற்சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்த முடிவு!</strong></p> <p>வேலூர், நவ.30- தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம், சம்மேளனத்தின் தலைவர் எம். பி.இராமச்சந்திரன் தலைமையில் வேலூரில் ஞாயிறன்று (நவ.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் கே. &nbsp;திருச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் &nbsp;வி. நாகேந்திரன் மற்றும் எ.மகாவிஷ்ணு, பொருளா ளர் சித்தராபேகம் உட்பட சம்மேளன நிர்வாகிகள் &nbsp;மற்றும் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர். தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோதப் &nbsp;போக்கினைக் கொண்ட நான்கு சட்டத் தொகுப்பு கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில், தொழில் &nbsp;பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை கள் சட்டத் தொகுப்பில் இருந்த பீடி மற்றும் &nbsp;சுருட்டு தொழிலாளர் சட்டம் 1966 பறிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய சட்டத் தொகுப்பானது, பீடி தொழிலாளர்களைச் சுரண்டலுக்கு ஆளாக்கி, அவர்களைச் சமூகப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றியுள்ளது. எனவே, பீடித் தொழிலில் உள்ள &nbsp;அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றி ணைத்து, இந்தப் புதிய சட்டத் தொகுப்பிற்கு எதி ராகப் பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. சட்டமீறல்கள் பீடி சுருட்டு தொழிலாளர் சட்டத்தின்படி, தொழி லாளர்களுக்கு வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காத நாட்களுக்கு 50 விழுக்காடு நஷ்ட ஈடு வழங்கப்பட &nbsp;வேண்டும் என்ற விதியினை டிரேட் மார்க் பீடி கம்பெனிகள் அப்பட்டமாக மீறி வருகின்றன. ஊழியர் சேமநல நிதி மோசடி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப். தொகையைச் சேமநல நிதிக் கணக்கில் &nbsp;செலுத்தாமல், சில பீடி முதலாளிகள் ஏமாற்றி வரு கின்றனர். மேலும், பணிக்கொடை, விடுமுறைச் சம்பளம், போனஸ் உள்ளிட்ட சட்டப்படியான பணப் பலன்களை வழங்கவும் மறுக்கின்றன. இத்த கைய உழைப்புச் சுரண்டல்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று &nbsp;கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஊதிய உயர்வு கோரிக்கை பீடி தொழிலாளர் கூலி உயர்வுக்கான கோரிக்கை பீடி டிரேட் மார்க் நிர்வாகத்திற்கும், தொழிலாளர் துறைக்கும் அனுப்பப்பட்டு ஆறு &nbsp;மாதங்களாகியும், தொழிலாளர் துறை முத்தரப்புப் &nbsp;பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.