முந்தய பக்கம்

தொழிலாளர் சட்டங்கள் ரத்து புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

12 Dec 2025, 3:12 pm
தொழிலாளர் சட்டங்கள் ரத்து புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்
<p>புதுச்சேரி, டிச. 12- போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு ரத்து செய்து, அதனை 4 சட்டத் தொகுப்பு களாக மாற்றியதைக் கண்டித்து, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் விவ சாயிகள் சங்கங்களின் சார்பில் புதுச்சேரி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. புதுச்சேரி முதலியார்பேட்டையில் துவங்கிய இந்தத் தெருமுனைப் பிரசாரத்திற்கு, சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் சீனுவாசன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரிச் செயலாளர் சங்கர், விதொச மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகி யோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். உப்பளம் தண்ணீர் தொட்டி எதிரே துவங்கிய இந்தப் பிரச்சாரம், புதுச்சேரி நகரம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தில் முருகன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மதிவாணன், மணிபாலன், மது, ஜோதிபாசு, பச்சமுத்து, விஜயகுமார், தஷ்ணாமூர்த்தி, தினேஷ்குமார், லாவண்யா, பரமேஸ்வரி, தாமோதரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இந்த இயக்கமானது டிசம்பர் 14-ஆம் தேதி வரை உழவர்கரை, வில்லியனூர், மதகடிப்பட்டு, பாகூர், திருக்கனூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram