வழக்கறிஞர் வீ.அஜய் கோஷ் மறைவுக்கு தொழிற்சங்க தலைவர்கள் புகழஞ்சலி
10 Jan 2026, 2:48 pm
<p><strong>வழக்கறிஞர் வீ.அஜய் கோஷ் மறைவுக்கு தொழிற்சங்க தலைவர்கள் புகழஞ்சலி</strong></p>
<p>சென்னை, ஜன. 10- தொழிலாளர் உரிமைக்காக நீதி மன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வீ.அஜய் கோஷ் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளியன்று (ஜன. 9) சென்னை ஒய்.எம்.சி.ஏ ஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) நடத்திய இக்கூட்டத்திற்குச் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். மேனாள் நீதியரசர் து.ஹரிபரந்தாபன், மூத்த வழக்கறிஞர்கள் வைகை, விஜய குமரன், சிஐடியு மாநிலத் துணைத் தலை வர் கே.விஜயன், டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், எல்பிஎப் பேரவைத் தலைவர் கி.நடராஜன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அஜய் கோஷின் பணிகளை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.</p>
