முந்தய பக்கம்

தொழிற்சங்கம், விவசாயிகள் சங்க கூட்டுக்குழு கூட்டம்

26 Dec 2025, 4:32 pm
தொழிற்சங்கம், விவசாயிகள்  சங்க கூட்டுக்குழு கூட்டம்
<p><strong>தொழிற்சங்கம், விவசாயிகள்&nbsp; சங்க கூட்டுக்குழு கூட்டம்</strong></p> <p>நாமக்கல், டிச.26- மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டுக்குழு கூட்டம் திருச்செங் கோடு சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆதிநாராய ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், &nbsp;2025 வரைவு மின்சார திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அணுசக்தி சட்டம் மற்றும் அணு சக்தி சேதத்திற்கான கொடுமை பொறுப்புச் சட்டத்தில் முன் மொழிக்கப்பட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். &nbsp;முன்பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறு வும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நாடு தழு விய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு, திங்களன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோரை பங் கேற்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஏஐடியுசி சார்பில், பி.தனசேகரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏஐஐயுசி ஆர்.கோபிராஜ் மற்றும் சிஐடியு சார்பில் எம். அசோகன், என்.வேலுச்சாமி, எம்.செங்கோடன், ஐ.ராயப் பன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram