தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி

12 Mar 2026, 4:20 pm
ஏற்றுமதியாளர்களுக்கு  வர்த்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி
<p><strong>ஏற்றுமதியாளர்களுக்கு &nbsp;வர்த்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></p> <p>திருப்பூர், மார்ச் &nbsp;12 - ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி &nbsp;சுங்கத் துறை கமிஷனரகம் இணைந்து, திருப்பூரில் உள்ள &nbsp;ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய வர்த்தக வசதி முயற்சிகளை &nbsp;விளக்கும் நிகழ்ச்சியை நடத்தின. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கூட்ட அரங் கில் ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற &nbsp;நிகழ்ச்சியில், திருச்சி சுங்கத் துறை ஆணையர் பாரத் பிரகாஷ் &nbsp;பங்கேற்று சுங்கத் துறை மேற்கொண்டுள்ள வர்த்தக வசதி நட வடிக்கைகள் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கி னார். இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் திருப்பூர் &nbsp;முக்கிய பங்காற்றி வருவதாகவும், இந்தியாவின் ஆயத்த &nbsp;ஆடை ஏற்றுமதி சுமார் 70% திருப்பூரிலிருந்து நடைபெறுகிறது &nbsp;என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய வர்த்தகத்தில் தற் போது பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. புதிய வர்த்தக &nbsp;ஒப்பந்தங்கள் உருவாகி வருவதால் புதிய வாய்ப்புகள் உரு வாகும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் &nbsp;சூழ்நிலை காரணமாக உருவாகும் சவால்கள் மற்றும் சுங்கத் &nbsp;துறையிடமிருந்து ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் ஆதரவு &nbsp;குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டீ சங்க துணைத் தலைவர் இளங்கோவன்; பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஏஇபிசி கமிட்டி உறுப்பினர் ஆர்.ராமு, டீ இணைச் செயலாளர்கள் குமார் துரைசாமி, ஆனந்த், திருச்சி &nbsp;சுங்கத் துறை கூடுதல் கமிஷனர் விஜய் கிருஷ்ண வேலவன், &nbsp;இணை கமிஷனர் உமேஷ் ராதோட், உள்நாட்டு கண்டெய்னர் &nbsp;டிப்போ திருப்பூர் உதவி கமிஷனர் உன்னி ஆகியோர் கலந்து &nbsp;கொண்டனர். ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்றனர். டீ இணைச் செயலாளர் குமார் துரைசாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.