வர்த்தக ஒப்பந்தங்கள் : ஏகாதிபத்தியத்திடம் சங்பரிவாரின் வெட்கக்கேடான சரணாகதி - டாக்டர் விஜூ கிருஷ்ணன்
9 Mar 2026, 4:24 pm

வர்த்தக ஒப்பந்தங்கள் : ஏகாதிபத்தியத்திடம் சங்பரிவாரின் வெட்கக்கேடான சரணாகதி

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து, இந்தியாவின் இறையாண்மையைக் கடு மையாக அடகு வைத்து, ஒரு அவமானகரமான ஒரு தலைப்பட்ச வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டார். டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் ஒருதலைப்பட்சமாக அறிவிக்க, அதனை மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வரவேற்ற விதம், கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து மிதித்துப் பெறப்பட்ட ஒரு வாக்கு றுதியைப் போலவே தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்ட தாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். அதற்குப் பதிலாக அமெரிக்கா 18 சதவீத “குறைக்கப்பட்ட” பரஸ்பர வரியை விதிக்கும். இந்தியா தனது வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும்.

சுமார் 500 பில்லியன் டாலர் (ரூ. 45 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில் நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட தயாரிப்பு களை வாங்குவதாகப் பிரதமர் உறுதியளித்தார். இந்தியத் தயாரிப்புகளுக்கு உதிரி அளவு வரி குறைக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த மோடி, 140 கோடி மக்கள் சார்பாக டிரம்பிற்கு நன்றி யும் தெரிவித்தார். வரலாற்றில் இத்தகைய ஒரு நயவஞ்சகம் ‘நன்மை பயப்பது’ போல் சித்தரிக்கப்படுவதும், சமமற்ற ஓர் ஒப்பந்தம் அடிமைத்தனமான நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அரிதானது. நாடாளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களுடனோ எந்த விவாதமும் இன்றி, ரகசியத் திரைக்குப் பின்னால் இந்தச் சரணாகதி அரங்கேறியுள்ளது.

இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும். இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடகு வைக்கும் ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவ சாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் செயலாகும். ஐரோப்பிய ஒன்றியம் தனது மொத்த பட்ஜெட்டில் 31 சதவீதத்தை விவசாய மானியங்களுக்கு ஒதுக்கும் நிலையில், இந்தியாவில் சமீபத்திய ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்பு டைய துறைகளுக்கு வெறும் 2.7 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தனது 18.65 லட்சம் விவசாயிகளுக்காக சுமார் ரூ. 4.02 லட்சம் கோடி நிதி வழங்குகிறது. இது ஒரு அமெரிக்க விவசாயிக்கு சுமார் ரூ. 21.56 லட்சம் மானியத்தைக் குறிக்கும். ஆனால் இந்தியாவில், சுமார் 14.6 கோடி விவசாயிகளுக்குப் பகிரப்படும் மானியம் தனிநபருக்கு வெறும் ரூ. 34,000 மட்டுமே. அமெரிக்கா வின் பெரும் பண்ணை முதலாளிகளுடன், வெறும் 2.67 ஏக்கர் சராசரி நிலம் கொண்ட ஏழை இந்திய விவசாயி நேரடிப் போட்டியில் தள்ளப்படுவது பேரழி விற்கே வழிவகுக்கும். இந்தியா-இலங்கை மற்றும் இந்தியா-ஆசியான் தாராள வர்த்தக ஒப்பந்தங்களால் ஏற்கெனவே ரப்பர், தேயிலை, காபி மற்றும் மிளகு பயிரிடும் விவசாயி கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர்.

குறிப்பாக கேரளா வில் ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. இப்போது அமெரிக்கா உடனான ஒப்பந்தம் அந்தத் துயரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும். பருத்தி விவசாயிகளின் பேரழிவு ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்கு மதி 200 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி விலக்கை அறிவித்துள்ளது. இது அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதி மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். அமெ ரிக்காவின் கச்சா பருத்தியை இறக்குமதி செய்வது இந்தியப் பருத்தி விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை யில் கடும் சரிவை ஏற்படுத்தும். ஏற்கெனவே கடன் சுமை யால் தற்கொலைகள் அதிகம் நிகழும் மகாராஷ்டி ராவின் விதர்ப்பா போன்ற பகுதிகளில் இது மேலும் நெருக்கடியை உருவாக்கும். அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய நெசவுத் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படும்.

மலிவான அமெரிக்கப் பருத்தி நமது சந்தையைக் கைப்பற்றினால், உள்நாட்டுப் பருத்தி உற்பத்தியாளர்கள் முற்றிலும் அழிந்துவிடு வார்கள். இது வெறும் வர்த்தகப் பிரச்சனையல்ல; மாறாக இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதா ரத்தையே சிதைக்கும் திட்டமாகும். அமைச்சர் பியூஷ் கோயலின் பொய்கள் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “விவசாயத் துறையில் அமெரிக்காவிற்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை” என்று கூறி விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார். ஆனால், வர்த்தக ஒப்பந் தத்தின் முதல் பத்தியே இதற்கு மாறாக உள்ளது. கால்நடைத் தீவனம், சோளம், கொட்டை வகைகள், பழங்கள், சோயாபீன் எண்ணெய் மற்றும் மது பானங்கள் உள்ளிட்ட அமெரிக்கத் தயாரிப்புகளுக் கான இறக்குமதி வரிகளை இந்தியா நீக்கும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. மிக முக்கியமாக, தானியங்களுக்கான இறக்கு மதி வரிப் பாதுகாப்பு குறித்து எந்தத் தெளிவான உறுதி மொழியும் இல்லை.

இது இந்தியாவின் விவசாயச் சந்தையை அமெரிக்காவின் கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, இந்தியா மீண்டும் உணவுப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் ‘பிஎல்-480’ (PL-480) போன்ற அவமானகரமான திட்டங்களைச் சார்ந்திருக்கும் 1960-களின் இருண்ட காலத்திற்குத் தள்ளப்படும். திறந்தவெளிச் சந்தையும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பும் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் உணவுத் தற்சார்பைக் கேள்விக்குறியாக்குகிறது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு அப்பாற் பட்டு, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது இந்தியாவின் பொது விநியோகத் திட்டத்தையும் பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் உணவுச் சந்தையைக் கட்டுப்படுத்தத் தொடங்கி னால், ஏழை மக்களுக்கான மலிவு விலை உணவு என்பது கனவாகிப்போகும். அமெரிக்கா தனது வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்தியாவை ஒரு நுகர்வோர் சந்தையாக மட்டுமே பார்க்கிறது. ஆண்டுக்கு ரூ.

9 லட்சம் கோடிக்கு அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற கட்டாயம், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை விழுங்கும். அமெரிக்கா தனது வரிகளை ஏழு மடங்கு உயர்த்திய பின், இப்போது சிறிது குறைத்திருப்பதை ஒரு சாதனையாகச் சங்பரிவார் கொண்டாடுவது வெட்கக்கேடானது. சங்பரிவாரின் துரோகம் தோல்வியடைந்த மூன்று வேளாண் சட்டங்கள் எதைச் செய்ய நினைத்தனவோ, அதை இந்தச் சமமற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துமுடிக்கும். இது விவசா யிகளின் ஏழ்மைக்கும், நிலப்பறிப்பிற்கும் வழி வகுக்கும். சீனாவும் பிரேசிலும் டிரம்ப்பின் மிரட்டலு க்குப் பணிய மறுத்துள்ள நிலையில், சங்பரிவார் தனது ஏகாதிபத்திய ஆதரவுப் பாரம்பரியத்திற்கு உண்மை யாக இருந்து இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது. பாஜக அரசு தனது “மேக் இன் இந்தியா” திட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே, அமெரிக்கப் பொருட்களை இந்தியாவுக்குள் திணிப்பது முரண்பாடு ஆகும்.

இது இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் சிதைத்து, வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும். மார்ச் 24 தில்லி முற்றுகை இது கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு ‘வாழ்வா சாவா’ தருணமாகும். அமெரிக்கா உடனான இந்தச் சமமற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக பிப்ரவரி 12 அன்று நாடு முழுவதும் மக்கள் வீதிக ளில் இறங்கிப் போராடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. மார்ச் 24 அன்று நடைபெறவுள்ள ‘தில்லி சலோ’ போராட் டத்தைப் பெரும் வெற்றியாக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். ஏகாதிபத்தி யத்தின் பிடியிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்போம்! பீப்பிள்ஸ் டெமாக்ரசி, பிப்.22, 2026 தமிழில் சுருக்கம் : எம்.சதீஸ்குமார்