முந்தய பக்கம்

தோல் தொழிற்சாலையில்  விஷவாயு கசிவு:  இருவர் உயிரிழப்பு

24 Jan 2026, 3:38 pm
தோல் தொழிற்சாலையில்  விஷவாயு கசிவு:  இருவர் உயிரிழப்பு
<p><strong>தோல் தொழிற்சாலையில் &nbsp;விஷவாயு கசிவு: &nbsp;இருவர் உயிரிழப்பு</strong></p> <p>வேலூர், ஜன. 24- &nbsp;பேர்ணாம்பட்டு அருகே தோல் தொழிற் சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் &nbsp;உயிரிழந்தனர். பக்காலப்பல்லி பகுதியில் உள்ள அசேன் பாஷாவுக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையில் சனிக்கிழமையன்று (ஜன. 24) வேலை நடந்தபோது, இயந்திரத்திலிருந்து எதிர்பாராத விதமாக விஷவாயு கசிந்தது. இதில் மயங்கி விழுந்த ஷேக் அலி (58) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகிய இருவரை சக ஊழியர்கள் மீட்டு ஆம்பூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பேர்ணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram