தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆபத்தை உணராமல் அணை பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்

13 Dec 2025, 5:13 pm
ஆபத்தை உணராமல் அணை பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்
<p><strong>ஆபத்தை உணராமல் அணை பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்</strong></p> <p>உடுமலை,டிச.13- திருமூர்த்தி அணையின் தண்ணீர் இருக்கும் பகுதிக்கு செல்ல தடை விதித்திக்கப்பட்டும், அதை கண்டு கொள்ளாமல் &nbsp;திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணையின் &nbsp;உள் பகுதிக்கு செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை திருமூர்த்திமலை திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மலை அடிவா ரத்தில் அமணலிங்கேஸ்வர் கோவிலும், மலையின் மேல் &nbsp;சுற் றுலாப் பயணிகளை கவரும் வகையில், வனத்துறை மற்றும் &nbsp;கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயற்கையாக உருவாக்கப் பட்ட பஞ்சலிங்க அருவி ஆகியவை உள்ளன. இவைக ளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா &nbsp;பயணிகள் வருகின்றனர். அதே போல் உடுமலை ஊராட்சி &nbsp;ஒன்றிய &nbsp;நிர்வாகத்தின் சார்பில் காண்டூர் கால்வாய் அருகில் &nbsp;சிறுவர் நீச்சல் குளம், பூங்கா ஆகியவை உள்ளன. மேலும் &nbsp;தளி பேரூராட்சியின் சார்பில் திருமூர்த்தி அணையில் படகு &nbsp;சவாரி மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடத்தப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாகப் பராமரிப்பு செய்யாமல் படகு &nbsp;சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் &nbsp;குளிப்பதால் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டது. இதைய டுத்து சுற்றுலாப் பயணிகள் அணைக்கு செல்ல முடியாத வகை யில் பொது பணித்துறை சார்பில் அணையின் கரைப்பகுதி யில் முள்வேலிகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் படகு சவாரிக்கு செல்லும் வகையில், நிரந் தர கேட் அமைக்கப்பட்டு இருந்த பகுதியை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால், கேட் மற்றும் &nbsp;முள் வேலிகள் சேதமடைந்த தடத்தின் வழியாக சுற்றுலாப் &nbsp;பயணிகள் அணையின் உள்பகுதிக்கு சென்று விடுகின்ற னர். இதனால் மீண்டும் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே அணைக்கு உள்ளே செல்வதை தடுக்கும் &nbsp;வகையில், கேட் உள்ள பகுதி மற்றும் அணையை முழுமை யாக கண்காணிக்கும் வகையில் நிரந்தரமாக ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை &nbsp;வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.