புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளியல்
8 Jun 2026, 9:43 pm
<p><strong>புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளியல்</strong></p><p>சின்னாளப்பட்டி, ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், அதி காரிகள் விதித்திருந்த தடையை மீறி சுற் றுலா பயணிகள் குளித்த சம்பவம் கவலை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாறை, கானல்காடு, தடியன் குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி. பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதி களில் மழை பெய்யும் காலங்களில் புல்லா வெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டும். இங்கிருந்து செல்லும் நீர், செம்பட்டி அருகேயுள்ள ஆத்தூர் காம ராஜர் அணைக்கு செல்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகு திகளில் மழை குறைந்துள்ளதால், நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டு கிறது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை யை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களில் புல்லாவெளி நீர் வீழ்ச்சிக்கு வந்தனர். நீர்வீழ்ச்சி பகுதியில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவ தால், அங்கு பொதுமக்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பி னும், சிலர் தடையை மீறி நீர்வீழ்ச்சி பகு திக்குள் சென்று, பாதுகாப்பு அபாயத்தை பொருட்படுத்தாமல் குளித்து மகிழ்ந்தனர். இதுபோன்ற செயல்கள் விபத்து களுக்கு வழிவகுக்கும் என்பதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிகாரி கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
