தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

17 Jan 2026, 2:42 pm
சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
<p><strong>சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p> <p>ஈரோடு, ஜன.17 காணும் பொங்கலை கொண்டாட பல் வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பய ணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட் டது. &nbsp;காணும் பொங்கலை முன்னிட்டு, சனி யன்று பொதுமக்கள் சுற்றுலாத் தலங்க ளுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டினர். அதன்படி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை முன்பு அமைந்துள்ள நீர்வளத் துறைக்கு சொந்தமான அணைப் பூங்கா விற்கு காணும் பொங்கலை முன்னிட்டு சுற்று லாப் பயணிகள் வருகை அதிகரித்தது. பயணி களின் வசதிக்காக சிறப்பு டிக்கெட் கவுண்டர் கள் அமைத்து பூங்காவிற்குள் அனுமதிக்கப் பட்டனர். சுற்றுலாப் பயணிகள் குடும்பத்து டன் பூங்காவில் உள்ள ஊஞ்சல், சிறுவர் &nbsp;ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட விளையாட்டு &nbsp;சாதனங்களில் விளையாடி மகிழ்ந்து &nbsp;பொழுது போக்கினர். மேலும் பூங்காவில் &nbsp;அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தில் நீண்ட &nbsp;வரிசையில் குடும்பத்துடன் படகில் பய ணித்து மகிழ்ந்தனர். பவானிசாகர் அணை &nbsp;பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை &nbsp;அதிகரித்ததால் பூங்கா களை கட்டியது. ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற் றுலாத் தலத்திற்கு குடும்பங்களுடன் சுற் றுலாப் பயணிகள் வந்தனர். இவர்கள் பரிசல் &nbsp;சவாரி மூலம் பாறைகளுக்கு நடுவே இயற் கையாக அமைந்துள்ள அருவிகளை ரசித்த னர். மெயின் அருவி, சினி அருவி, ஆற்றங் கரை ஓரங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் &nbsp;உள்ள முதலைப்பண்ணை, வண்ண மீன் காட் சியகம், பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங் களை தங்கள் குடும்பத்தினருடன் சுற்றிப் &nbsp;பார்த்து மகிழ்ந்தனர். பொங்கல் விடுமுறை யில் ஒகேனக்கலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் என்பது குறிப்பிட்டதக்கது. ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சனி யன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந் தனர். அவர்கள் ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா &nbsp;தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் &nbsp;கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிக ளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணி கள் அதிக அளவில் விரும்பி செல்லும் இடங்க ளில் ஒன்றான ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் &nbsp;கூட்டம் அலைமோதியது. இதனால் படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலாப் பய ணிகள் படகு சவாரி செய்வதற்கு பயண சீட்டு &nbsp;வாங்கிக்கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து &nbsp;படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோவை குற்றாலம் கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் அமைந்துள்ள, கோவை குற்றாலம் &nbsp;அருவி, முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன் றாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொங் கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த &nbsp;மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் &nbsp;இருந்து பொதுமக்கள் கோவை குற்றாலத் தில் குவிந்தனர். சாடிவயல் பகுதியில் உள்ள &nbsp;வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு களை பெற்றுக்கொண்டு வனத்துறை வாக னத்தில் சென்று பொதுமக்கள் குழந்தைகளு டன் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த னர். தற்போது குற்றாலம் அருவிக்கு வரும் &nbsp;நீரின் அளவு சீராக உள்ளதால் சுற்றுலாப் பய ணிகள் அச்சமின்றி குளித்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிக ளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததால் வனத் துறை ஊழியர்களும் பாதுகாப்புப் பணியில் &nbsp;ஈடுபட்டனர். மேலும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என கடந்த மூன்று நாட்களில் &nbsp;மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கோவை குற்றா லம் அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர். &nbsp; இதேபோன்று, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் ஆயிரக்க ணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து &nbsp;ஊர் சுற்று மகிழ்ந்தனர். உடுமலை இதேபோன்று, உடுமலை தாலுகாவில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் &nbsp;வரும் திருமூர்த்திமலை, அமராவதி அணை &nbsp;ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக &nbsp;பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு &nbsp;அதிக அளவில் வந்திருந்தனர். மேலும் கேரள &nbsp;மாநில எல்லையான சின்னாறு வனப்பகுதி யிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நி லையில், திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய சுற் றுலாத் தலங்களாக உள்ள இப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் எதுவும் இல்லை. மேலும் &nbsp;பூங்கா, படகு இல்லங்கள் செயல்பாட்டில் இல்லாததால் வருகை தரும் சுற்றுலாப் பய ணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கும் இந்த இடங் களை முழுமையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.