முந்தய பக்கம்

காணும் பொங்கல் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

17 Jan 2026, 2:42 pm
காணும் பொங்கல் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
<p><strong>காணும் பொங்கல் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்</strong></p> <p>தேனி, ஜன.17- காணும் பொங்கல் தின த்தை முன்னிட்டு வைகை அணையில் சுற்றுலா பயணி கள் குடும்பம் குடும்பமாக &nbsp;குவிந்து, விழாக்கால மகி ழ்ச்சியை வெளிப்படுத்தினர். தைப் பொங்கல், மாட்டுப் &nbsp;பொங்கலைத் தொடர்ந்து சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. இதனை முன் னிட்டு கிராமப்புறங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இந்நிலையில், தொடர் &nbsp;விடுமுறை காரணமாக வைகை அணையில் சுற் றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி யூரிலிருந்தும் ஏராளமா னோர் வைகை அணைக்கு வருகை தந்தனர். அணையின் வலது கரை மற்றும் இடதுகரை பூங்காக்களில் அமைந் துள்ள சிறுவர் பூங்கா, பெரி யாறு மாதிரி வைகை பூங்கா, &nbsp;மச்சக்கன்னி பூங்கா, யானை சறுக்கல், உல்லாச &nbsp;ரயில், படகு குழாம், இசை யுடன் நடனமாடும் நீரூற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலா பய ணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும், தனியார் மூலம் &nbsp;இயக்கப்படும் ராட்டினங்க ளிலும் அதிக அளவில் கூட் டம் காணப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram