முந்தய பக்கம்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2 Jan 2026, 3:33 pm
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
<p><strong>திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p> <p>அருமனை, ஜன.1 - குமரியின் குற்றாலம் என அழைக்கப் படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பள்ளி,கல்லூரி விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திற் பரப்பிற்கு வந்துள்ளனர். அருவியில் குளிப்பதற்காக பெண்களுக்காக தனி யாக இடம் ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்புபணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா காவலர்களை பணியமர்த்தியுள்ள னர். பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற் கொள்ளும் சுற்றுலா காவலர்களுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் நன்றி, பாராட் டினை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram