உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
8 Jun 2026, 1:03 am
<p><strong>உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p><p>உதகை, ஜூன் 7- வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இயற்கை எழில் சூழ்ந்த உதகை நகரம் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். அதன்படி ஞாயிறன்று அரசு தாவர வியல் பூங்காவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களு டன் ஏராளமானோர் வருகை தந்த னர். பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டி ருந்த பல்வேறு வகையான மலர்கள், அலங்காரச் செடிகள் மற்றும் கண் ணாடி மாளிகையை சுற்றுலாப் பய ணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர். மேலும், பசுமையான புல் வெளிகளில் அமர்ந்து ஓய்வெடுத் தும், குழந்தைகளுடன் விளையாடி யும், புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தும் நேரத்தை செல விட்டனர். இதனால் அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டதுடன், சுற்றுலாப் பயணிக ளின் உற்சாகமான வருகையால் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. விடுமுறை நாளை இயற்கையோடு இணைந்து மகிழ்ச்சியாக கழித்த சுற்றுலாப் பயணிகள், உதகையின் குளிர்ச்சியான காலநிலையையும் இயற்கை அழகையும் ரசித்து மகிழ்ந் தனர்.</p>
