முந்தய பக்கம்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

25 minutes before
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல், நவ. 24–கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, பில்லர் ராக், குணா குகை, பைன் மரச்சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், அங்கு நிலவும் மாறுபட்ட குளுமையான காலநிலையை ரசித்தனர். மேலும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளின் அழகைக் கண்டு மகிழ்ந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகப் பொழுதைக் கழித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram