கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
9 Nov 2025, 2:37 pm

பறிமுதல் செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் மாற்று ஏற்பாட்டை எதிர்நோக்கும் சுற்றுலாப் பயணிகள்

உதகை, நவ.9- நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் நிலை யில், நகருக்குள் குடிநீருக்காக அவதிக்குள் ளாகும் சுற்றுலாப் பயணிகள், மாற்று ஏற் பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர். நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் ஒருமுறை பயன்ப டுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாலித்தின் பைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் 1 லிட்டர், 2 லிட் டர் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்த முற்றி லுமாக தடை விதித்துள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி அவ்வப்போது அபராதங்கள் விதித்து நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதே போல், மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணி களின் வாகனங்களில் கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக கொண்டு செல்லப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்று லாப் பயணிகளை மாநில எல்லைப் பகுதிக ளில் கடுமையாக எச்சரித்து அனுமதித்து வரு கின்றனர். இந்நிலையில், மேல்கூடலூர் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகள் குடிக்க பயன்படுத்த கொண்டு வரக்கூடிய பிளாஸ் டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தும் அப ராதங்கள் விதித்து வருவாய் துறையினர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருந்து உதகைக்கு 50 கிலோமீட்டர் அடர்ந்த வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ள மலைப் பாதை வழியாக உதகையை அடைய வேண் டும். செல்லும் வழியில் கிட்டத்தட்ட 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் எந்த கடைக ளும், வணிக நிறுவனங்களும் இல்லாததால் மலைப்பாதையில் வனப்பகுதியின் வழியாக உதகை நோக்கி வரக்கூடிய சுற்றுலாப் பயணி கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி பல்வேறு சிர மங்களுக்குள்ளாகி வருகின்றனர். இத னால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழக் கூடிய உதகைக்கு ஒருமுறை வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அடுத்த முறை வருவது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி யுள்ளது. குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்யும் வருவாய் துறையினர் அதற்கு மாற்றாக எவ் வித நடவடிக்கையும் எடுக்காமல், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி அபராதம் விதிப் பதால் உதகைக்கு செல்வது மிகப்பெரிய அச் சுறுத்தலாகவே உள்ளது என சுற்றுலாப் பய ணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யும் இடங்களில், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய சுகாதாரக் கொள்கை?

கோவை, நவ. 9- ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய தேசிய சுகாதாரக் கொள்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீ தத்தை சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. பிறப்பிலிருந்து ஆயுட்காலத்தை 70 ஆக உயர்த்து தல், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல் வேறு இலக்குகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், கொள்கை வெளியாகி எட்டு ஆண்டுகள் கடந் தும், இந்தியா இந்த இலக்குகளை அடையத் தவறியுள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 30 முதல் 70 வயதுக்குள் இதயம், புற்றுநோய், நீரிழிவு, சுவாச நோய்களால் இறப்போரின் விகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள் ளது. இதுகுறித்து, சிஐடியு மாநாட்டில் பங்கேற்றிருந்த தமிழ் நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் சத்யநாராயணன், ஒன்றிய அரசு உறுதி யளித்த 2.5% ஒதுக்கீட்டில், இன்றுவரை 1.9% மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது. சிஐடியு-வின் 16 ஆவது தமிழ் மாநில மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக் கப்பட வேண்டும். மேலும், உயிர்காக்கும் அனைத்து மருந்துக ளுக்கும் வரி முழுமையாக விலக்களிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள் ளது. மேலும், எந்த மருந்து நிறுவனமும் தனது மருந்தை சந்தை யில் அறிமுகப்படுத்தும் போது, அதன் விலையை தானே நிர் ணயிக்கும் நடைமுறைக்கு உச்ச விலை வரம்பு (Price Cap) விதிக்கப்பட வேண்டும். தரமற்ற மற்றும் போலி மருந்துக ளின் பயன்பாட்டை ஒழிக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு, நவ.9- தேவை அதிகரிப்பு காரணமாக ஈரோட் டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த வாரத் தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.9,500 முதல் ரூ.13,900 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,900 முதல் ரூ.12,700 வரையும் விற்பனையானது. இந்த வாரத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.8,369 முதல் ரூ.15,119 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8,099 முதல் ரூ.13,888 வரையும் விற்பனையாது. இந்த வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கத்தினர் கூறுகை யில், புதிய மஞ்சள் அறுவடைக்கு பின் கடந்த 4 மாதங்களாக மஞ்சளை வியாபாரிகள் வாங்கி இருப்பு வைப்பது குறைந்துள்ளது. தற்போது இருப்பு இல்லை என்பதால் அதிக மாக வாங்குகின்றனர். தேவை அதிகரிப்பு, ஏற்றுமதி 10 முதல் 15 சதவீதம் வரை உயர்வு, மகாராஷ்டிரா, நிஜாமாபாத், ஆந்திரா போன்ற இடங்களில் மழையால் மஞ்சள் மக சூல் பாதிப்பு போன்ற காரணங்களால் ஈரோடு சந்தையில் தற்போது விற்பனை அதிகமாகி, விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டு தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே அதி கமாக பெய்து, வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்துள்ளதால் தற்போது பயிரிடப் பட்டுள்ள மஞ்சளும் அதிகம் பாதிக்கும் அச் சம் உள்ளது. அவ்வாறு பாதித்தால் வரத்து, தரம் குறையலாம். எனவே, வியாபாரிகள் தர மான மஞ்சளை வாங்கி இருப்பு வைப்பதால் விலை உயர்கிறது. மழைக்குப் பின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதற்கு ஏற்ப வரும் நாள்களில் மஞ்சள் விலை மாறுபடும், என்ற னர்.