முந்தய பக்கம்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

2 Jan 2026, 3:33 pm
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
<p><strong>மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</strong></p> <p>திருநெல்வேலி, ஜன.2- மணிமுத்தாறு அருவி திருநெல்வேலி மாவட்டத்தில், மாஞ்சோலை மலைகளுக்கு அருகில், தாமிரபரணி ஆற்றின் முக்கிய கிளை நதியான மணிமுத்தாறு நதியி லிருந்து உருவாகும் ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும். &nbsp;மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. &nbsp;இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க &nbsp;தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மாத தடைக்கு பின்னர் கடந்த வாரம் தான் அங்கு &nbsp;சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் தடை விதிக்கப் பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளோடு சொந்த ஊர்களுக்கு வந்திருந்த &nbsp;நெல்லை மாவட்ட மக்கள் அருவியில் குளிக்க சில நாட்களாக ஆர்வமுடன் சென்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram