முந்தய பக்கம்

சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

25 Dec 2025, 6:14 pm
சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்
<p><strong>சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்</strong></p> <p>தருமபுரி, டிச.25- ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் &nbsp;அருகே உள்ள மொண்டுகுழி பகுதியைச் சேர்ந்த அன்பழ கன் என்பவர் அண்மையில் இறந்துள்ளார். அவரின், ஈமச் சடங்கிற்காக அவரது உறவி னர்கள் 40க்கும் மேற்பட்டோர் &nbsp;2 தனியார் சுற்றுலா வாகனத்தில் ஒகேனக்கல் பகுதிக்கு வியாழனன்று வந்துள்ளனர். அப் போது ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆஞ் சநேயர் கோவிலின் மேல் இரண்டாவது &nbsp;வளைவில், முன்னால் சென்ற சுற்றுலா வேன் &nbsp;ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் இருந்த சிறிய தடுப்பின் மீது &nbsp;ஏறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இவ்விபத்தில் வாகனத்தில் &nbsp;பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வாக னத்தின் மூலம் மீட்டு பென்னாகரம் அரசு &nbsp;மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து &nbsp;விபத்துக்குள்ளானதால், ஒகேனக்கல் பகு திக்கு சுற்றுலா வந்த வாகனங்கள் சுமார் &nbsp;2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் &nbsp;நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து ஒகேனக் கல் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram