தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமுளி மலைச்சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது மதுரையைச் சேர்ந்த 13 பேர் உயிர் தப்பினர்

20 Jan 2026, 2:46 pm
குமுளி மலைச்சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது மதுரையைச் சேர்ந்த 13 பேர் உயிர் தப்பினர்

குமுளி மலைச்சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது மதுரையைச் சேர்ந்த 13 பேர் உயிர் தப்பினர்

தேனி, ஜன.20- மதுரையிலிருந்து தேக்கடிக்கு 8 ஆண்கள், 4 பெண்கள் என 12 சுற்று லாப் பயணிகளுடன் டெம்போ டிராவலர் வேன் செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1 மணி அளவில் லோயர் கேம்ப் – குமுளி மலைச்சாலையில் பழைய செக் போஸ்ட் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப் போது வாகனத்தின் முன்பகுதியி லிருந்து திடீரென புகை வெளியேறு வதை கவனித்த மதுரையைச் சேர்ந்த டிரைவர் காதர்பாஷா (26), உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி னார். புகை கிளம்புவதை கண்டதும் சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர் அனைவரும் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கி பாதுகாப்பான இடத் திற்கு ஓடினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ வேன் முழு வதும் பரவி, வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து கம்பத்தி லிருந்து வந்த தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம்  போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்ட தாக தெரியவந்துள்ளது. இந்த சம்ப வத்தால் எல்லைப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.