தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தண்டையார்பேட்டை ஐஓசி முதல் ராயபுரம் வரை பள்ளி நேர தடையை மீறி செல்லும் டேங்கர் லாரிகள்

29 Oct 2026, 11:51 pm
தண்டையார்பேட்டை ஐஓசி முதல் ராயபுரம் வரை பள்ளி நேர தடையை மீறி செல்லும் டேங்கர் லாரிகள்

தண்டையார்பேட்டை ஐஓசி முதல் ராயபுரம் வரை பள்ளி நேர தடையை மீறி செல்லும் டேங்கர் லாரிகள்

சென்னை, அக். 29-சென்னையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் இருந்து காசிமேடு வழியாக ராயபுரம்செல்லும் சாலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், பள்ளி நேரமான காலை 8.20 மணியளவில் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் சாலைகளில் பயணிக்கும்நேரத்தில், கனரக வாகனங்கள் இந்த வழித்தடத்தில் செல்வது விபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் , பள்ளிநேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ள காலை மற்றும் மாலைநேர கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, தண்டையார்பேட்டை ஐஓசி முதல் காசிமேடு வழியாக ராயபுரம் வரையிலான சாலையில் போக்குவரத்துக் காவல்துறையினர் நேரடிஆய்வு மேற்கொண்டு, பள்ளி நேரங்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படும் முன்பே கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தி, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.