மயானத்தில் அடிப்படை வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் சமாதிகள்!
17 Dec 2025, 4:11 pm
<p><strong>மயானத்தில் அடிப்படை வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் சமாதிகள்!</strong></p>
<p>தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள் ளன. இதில் 18 ஆவது வார்டில் கோடியூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 250 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் சிலர் விவசாயமும், விவசாய கூலியாக வும், முறைசாரா தொழிலும் செய்து வருகின்ற னர். இக்கிராமத்தின் அருகே கோடியூர் ஏரி உள்ளது. ஏரியின் அருகே இக்கிராமத்தில் உள்ளவர்களுக்கு மயானம் உள்ளது. இந்த மயானத்தில் தலைமுறை தலைமுறையாக இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த ஏரி சிறு மழை பெய்தாலே நிரம்பி விடுவதால், இதன் அருகாமையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதால் இறந்த வர்களின் சமாதி நீரில் மூழ்கி விடுகிறது. ஏரியில் தண்ணீர் உள்ளபோது, கிராமத் தில் உள்ளவர்கள் இறந்தால் ஏரியின் மேடான பகுதியில் அடக்கம் செய்கின்றனர். அதுமட்டு மல்லாமல் மயானத்திற்கு உரிய கட்டமைப்பு வசதி இல்லாததால், இறந்தவர்களை எரியூட்ட தகன மேடை இல்லை. எனவே, இக்கிராமத் திற்கென தனி மாயனவசதி கேட்டு நீண்ட ஆண்டுகாலம் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் போராடியும் வருகின்றனர். பேரூ ராட்சி நிர்வாகம் செவிசாய்த்தபாடில்லை. சாலை சேதம் கோடியூர் கிராமத்திலிருந்து மேச்சேரி சாலை வரை ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை மண் சாலையாக இருந்தது. இச்சாலையின் வழியாக மேச்சேரி சாலை யின் அருகே இருக்கும் அரசுப்பள்ளி வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிப்பார்கள். மேலும், தங்கள் நிலங்களில் விளையும் விவசாயப் பொருட்களை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லவும், பென்னாகரம் நகரத்திற்கு எடுத்து சென்று சந்தைப்படுத்தவும் இச்சா லையை பயன்படுத்தி வந்தனர். நீண்ட ஆண்டு காலம் மண் சாலையாக இருந்ததை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை யாக மாற்றப்பட்டது. தற்போது குண்டும், குழியு மாக உள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத் தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தூர்வாரமல் உள்ள ஏரி கால்வாய் கோடியூர் அருகே உள்ள மற்றொரு பெரிய ஏரி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியை நம்பி 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் உள்ளன. அப்பகுதி கிராமங்களின் குடிநீர் தேவைக்கு தீர்வாகவும், நீராதார மாகவும் இந்த ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரியில் இருந்து பாசன கால்வாய் சுமார் ஒன் றரை கிலோ மீட்டர் உள்ளது. இந்த கால்வாயை யானது பல இடங்களில் தனிநபர்களால் ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் கால்வாய் தூர்வாராமல் புதர் மண்டியுள்ளது. இதனால் மழைக்காலங்க ளில் ஏரியிலிருந்து கால்வாய் வழியாக வெளி யேறும் உபரிநீர், கால்வாய் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், விவசாயத் தோட்டத்தில் நுழைந்து தேங்கி, பயிர் அழுகி சேதம டைவது ஆண்டுதோறும் வாடிக்கையாக உள்ளது. சிபிஎம் கோரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜி கூறுகையில், பெரிய ஏரி அப்பகுதி விவசாயி களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதனை கணக்கில் கொண்டு ஏரி கால்வாய் ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடியூரிலிருந்து மேச்சேரி சாலை வரை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். ஏரியின் அருகே தண்ணீர் இல்லாத பகுதியில் 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிய மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். -ஜி.லெனின்</p>
