தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் நோய் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை

9 May 2026, 12:42 am
ஒட்டன்சத்திரம் பகுதியில்  நோய் தாக்குதலால்  தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
<p><strong>ஒட்டன்சத்திரம் பகுதியில் நோய் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை</strong></p><p>ஒட்டன்சத்திரம், மே.8- ஒட்டன்சத்திரம் பகுதியில் வைரஸ் நோய் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, விருப்பாச்சி, கள்ளிமந்தயம், பொருளும் , தொப்பம்பட்டி, எரியோடு, அய்யலூர், வடமதுரை, குஜிலிம்பாறை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளியை வியாபாரிகளே நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர்.பின்னர் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், அய்யலூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் உள்ள மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி அதிக வரத்தால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ. 80 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தக்காளி செடியில் ஒயிட் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதை பார்த்த சக விவசாயிகள் தக்காளியை பயிரிடுவதற்கு தயங்கியதாலும், மேலும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தக்காளி செடிகளுக்கு போதுமான தண்ணீர் பாய்ச்ச முடியாததால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 300 முதல் ரூ. 600 வரை வெளியூர் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அமோக விளைச்சல் இருக்கும்போது விலை வீழ்ச்சியாலும், அதிக விலைக்கு விற்பனையாகும்போது வைரஸ் நோய் தாக்குதலால் வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.