சுங்கக்கட்டண உயர்வு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது வணிகர் பேரமைப்பு கண்டனம்
23 May 2026, 12:14 am
<p><strong>சுங்கக்கட்டண உயர்வு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது வணிகர் பேரமைப்பு கண்டனம்</strong></p><p>சென்னை, மே 22- அனைத்து சுங்கச்சாவடிகளி லும் சுங்கக்கட்டணம் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் உள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில், வளைகுடாப் போர் சூழல் காரண மாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் ஏற்கனவே உயர்த்தப் பட்டுள்ளன. இதன் விளைவாக, அத்தியா வசியப் பொருட்களின் விலைவாசி கடுமை யாக உயர்ந்து, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குப் பேரமைப்பு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பானது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும். இந்த ஒட்டுமொத்த சுமையும் நுகர்வோரான பொதுமக்கள் மீதே சுமத்தப்படும் சுமை யாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மாற்று வழிகள் மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திட்டமிட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். வணிகர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இந்த கண்டனத்தைப் பேரமைப்பு மிகவும் அழுத்தத்தோடு பதிவு செய்கிறது. உடனயாயாக இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.</p>
