சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்கக் கட்டணம் ரத்து
8 Apr 2026, 5:30 am

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்கக் கட்டணம் ரத்து

சிதம்பரம், ஏப். 7- சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலக் சுவர் 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியதைத் தொடர்ந்து, அந்தச் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலை அதிகாலை, சிதம்பரம் அருகே எருக்கன்காட்டுப்படுகை கிராமத்தையொட்டிச் செல்லும் நாகை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வாகனங்கள் அனைத்தும் பழைய சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

பாலம் சேதமடைந்த காரணத்தால், அதே சாலையில் கொத்தட்டை பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு 2 வழிகள், வருவதற்கு 2 வழிகள் என மொத்தமாக உள்ள 14 வழிகளிலும் எந்த வரி இன்றி வாகனங்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலம் சீரமைக்கப்பட்ட பின்னரே மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.