நம்பிக்கையின் வசந்தத்தை நோக்கிப் பயணிக்க...
27 Dec 2025, 4:49 pm

நம்பிக்கையின் வசந்தத்தை நோக்கிப் பயணிக்க...

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க ளைத் தெரிவித்துக்கொள்கிறது. கடந்து செல்லும் 2025ஆம் ஆண்டை, மீள்பார்வை செய்வது நமக்கு முக்கியமானதாகும். ஏனெ னில் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள நிகழ்வு களைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான், வரவிருக்கும் 2026ஆவது ஆண்டில் முழு சக்தியுடனும், நோக்கத்துடனும் அடியெடுத்து வைப்பதற்குத் தேவையான அடித்தளத்தை அது நமக்கு அளித்திடும். போலிச் செய்திகள், தவறான தகவல்களின் மையமாக... முதலில், கார்ப்பரேட்டுகளின் ஊடகங்கள் மேலாதிக்கம் செலுத்திடும் இன்றையசூழலில் நம்முடைய அடிப்படைக் கண்ணோட்டத்தை நம் வாசகர்கள் மத்தியில் மீண்டும் வலியுறுத்து வது நமக்கு அவசியமாகும். இந்த சமயத்தில் சமூக ஊடகங்களின் வளர்ந்து வரும் செல் வாக்கும் சற்றும் குறைவான முக்கியத்துவம் உடையவை அல்ல. இந்தத் துறையில் இந்தி யா போலியான செய்திகள் மற்றும் தவறான தகவல்களின் பிரதான மையமாக உருவெடுத் துள்ளது.

இந்தத் தளமும், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நடவடிக்கைகளின் காரணமாக, மக்கள் மத்தியில் பரஸ்பரம் வெறுப் பையும் பகைமையையும் உருவாக்குவதை முக்கியப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வரு வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு மிகவும் சீர்கெட்டுள்ள இன்றைய சூழலில், தேவையற்ற குழப்பங்களைத் தவி ர்த்து, நாட்டு மக்களின் நலன்களை மையமா கக் கொண்டு செய்திகளையும், ஆய்வுக்கட்டுரை களையும் வெளியிடும் பணியில் எங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம் என்று பீப்பிள்ஸ் டெமாக்ரசி வாசகர்களுக்கு உறுதி யளிக்கிறது. மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற... மூலதனங்களுக்கு இடையிலான போட்டி யில் தங்களை இழந்துவிடாமல் மக்கள் வெற்றி பெற வேண்டும். மக்கள் மத்தியில் பரஸ்பரம் வெறுப்பையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களை முறியடித்து மக்களிடையே ஒற்றுமை வெற்றி பெறவேண்டும். ஆனால், ‘மக்கள்’ என்பவர்கள் யார்? இதைத் தெளிவுபடுத்துவதும் முக்கியமான தாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் உழைக்கும் மக்கள் – தொழிலாளி வர்க்கம், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் – மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், சமூக சமத்துவ மின்மை மற்றும் துன்புறுத்தல்களால் பாதிக் கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பெண்கள், பழங்குடியி னர், தலித்துகள், சிறுபான்மையினர் உட்பட தங்களின் இருப்புக்காகவும் வாழ்வுக்காகவும் போராடும் கோடிக்கணக்கான ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட குடிமக்கள்தான். கடும் ஏற்றத்தாழ்வும் வேலையின்மைக் கொடுமையும் 2025ஆம் ஆண்டில், உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில், ஏற்றத்தாழ்வு கொடூர மான முறையில் அதிகரித்துள்ளது.

மொத்த செல்வம் மற்றும் வருமானத்தில் 40 சதவீ தத்திற்கும் அதிகமானவற்றை வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வசப்படுத்தி யுள்ளனர். இத்தகைய ஏற்றத்தாழ்வுடன் சேர்ந்து, இந்தியாவில் மக்களைப் பாதிக்கும் மற்றொரு பெரும் சாபம், விண்ணைமுட்டும் விதத்தில் அதிகரித்துள்ள வேலையின்மைக் கொடுமையாகும். இந்த இரண்டு காரணிகளும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தத் தேவை யைப் பாதிக்கின்றன. அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் பொருளாதாரம் வளர்வ தைத் தடுக்கின்றன. இந்தச் சுமை மக்களின் வாழ்க்கையைச் சமமற்ற முறையில் கடுமை யாகப் பாதிக்கிறது.

நிச்சயமாக, புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த சமீபத்திய அறிவிப்பும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தையும், கிராமப்புற ஏழைகளின் உரிமை அடிப்படையிலான நலத்திட்டங்களையும் ஒழித்துக்கட்டுவதற்காக, ‘ஜி ராம் ஜி’ என ஆடம் பரமாகப் பெயரிடப்பட்டுள்ள சட்டமும், வேலை யின்மைக் கொடுமையை மேலும் தீவிரப் படுத்திடும். எனவே, பிரதான ஊடகங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் ஒப்பீட்டு அளவு குறித்த துணிச்சலான கணிப்புகளுக்கு ஒரு தலைப்பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கும் அதே சமயத்தில், இந்தியக் குடிமக்களில் பெரும்பான்மையானோர் அனுபவிக்கும் கடு மையான எதார்த்தத்தை அவை மூடி மறைக் கின்றன. இயல்பாகவே, மனிதனின் ஐந்து அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் ஆகியவை மிக மோசமான நெருக்கடி நிலைக்கு ஆளாகி யுள்ளன. கல்வி நிறுவனங்களை கைப்பற்றி மதமயமாக்கல் - பகுத்தறிவை ஒழித்தல் அடுத்து, கல்வித் துறையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்துத் தனியாக ஆராய்ந்திட வேண்டும். இந்தத் துறை யில்தான் தற்போதைய ஆட்சியாளர்கள் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கி றார்கள். வணிகமயமாக்கல் மற்றும் கார்ப்ப ரேட்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்துவது, அரசுப் பள்ளிகள் பெருமளவில் மூடப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. பரவ லாக்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் நியாயமான உரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த கல்வி நிர்வாகத்தின் முழுக் கட்டமைப்பும், தீவிரமான மையப்படுத்தலால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், கல்வி சம்பந்தமான முந்தைய அனைத்து அமைப்புகளையும் செல்லாத தாக்கி, ஒழித்துக்கட்டும் விதத்தில் ஓர் உச்சபட்ச உயர் அமைப்பாகச் செயல்படக்கூடிய உயர் கல்வி கவுன்சிலை (Higher Education Coun cil) உருவாக்குவதற்கான சட்டத்தை நிறை வேற்றுவதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதனை உருவாக்குவதற்கான மற் றொரு முக்கிய நோக்கம் என்பது அதன் உள்ளடக்கத்தை மதமயமாக்குவது என்பதும், ஒட்டுமொத்த மதவாதத்தைக் கொண்டுவந்து அதன் அடிப்படையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது என்பதும், இறுதியாக மக்கள் மத்தியில் உள்ள பகுத்தறிவுச் சிந்தனையை ஒழித்துக்கட்டும் விதத்தில், வர லாறு மற்றும் அறிவியல் பாடங்களை மாற்றிய மைப்பது என்பதுமாகும். சமூக நீதி - காலநிலை நீதிக்கு அச்சுறுத்தல் நமது அரசமைப்புச்சட்டத்தின் இன்றியமை யாத அங்கமாக விளங்கும் சமூக நீதி, 2025 ஆம் ஆண்டிலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற தொ டர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், மேலும் தொடர் அழுத்தத்தின் காரணமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டியிருந்த போதிலும், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற் படவில்லை. மாறாக, இந்த ஆண்டில் தலித்து களும் பழங்குடியினரும் மிக மோசமான தாக்கு தல்களை எதிர்கொண்டனர். வன நிலங்களை ஆக்கிரமிப்பதில் கார்ப்பரேட்டுகளின் பேராசை யாலும், குறிப்பாக பழங்குடி மக்களை வெளி யேற்றத் துடிக்கும் சுரங்க நிறுவனங்களாலும், நீர், வனம், நிலம் ஆகியவை மேலும் அச்சுறுத்த லுக்கு உள்ளாகியுள்ளன. இப்போது, இந்தக் கேள்வி காலநிலை

நீதி மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சீரழிவுடனும் தொடர்புபடுத் தப்படுகிறது. நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவுகளும், ஆரவல்லி மலைத்தொ டர் மீதான தாக்குதலும் ஒரு புதிய, அருவருப்பான தாக்குதலை வெளிப்படுத்துகின்றன. தலித்து கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து பாதிக்கப்ப டக்கூடிய சமூகக் குழுக்களின் நீதி மற்றும் சமத்துவப் பிரச்சனையானது, காலநிலை நீதிக்கான பிரச்சனையுடன் ஒன்றிணைகிறது. குறிப்பாக, இந்துத்துவத்தின் முழுமையான தாக்குதலாலும், சனாதனத்தின் கட்டளை களைப் பின்பற்றுவதாலும் பாலினப் பிரச்சனை, அதாவது பெண்களின் பிரச்சனை, ஓர் அபாய கரமான நிலையை அடைந்துள்ளது. சீரழிந்த தேர்தல் ஆணையம் - பாஜக ஆதரவுச் செயல்பாடு இந்தச் செயல்முறைகள் அனைத்தின் விளைவுகளையும், அரசியல் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீது அவை ஏற் படுத்தும் பேரழிவுத் தாக்கத்தையும் புரிந்து கொள்வது கடினமல்ல. ஜனநாயகம் என்ற விஷயத்தில், 2025ஆம் ஆண்டில் வாக்களிக்கும் அரசமைப்புச்சட்ட உரிமை எதிர் கொள்ளும் நிலைமைதான் தனித்துத் தெரிகி றது. இந்தத் தாக்குதல் இருமுனைத் தாக்குத லாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகும், சமீபத்திய புள்ளிவிவரங்க ளின்படி, கார்ப்பரேட்டுகளின் நன்கொடைக ளில் கிட்டத்தட்ட 90 சதவீதமானது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக-விடம் ஒப்ப டைக்கப்படுவதாகத் தெரிகிறது. மற்றுமொரு மிக முக்கியமான அம்சம், இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக சீரழிந்துவிட்டது என்பதாகும். ‘எஸ்ஐஆர்’ (SIR) விவகாரத்தில் மக்கள் நம்பிக்கையூட்டும் வகையில் போராடி வருகி றார்கள். ஆனால், இந்த விசித்திரமான பிரச்சனை குறித்து முடிவெடுப்பதில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது சொந்த நடை முறைத் தேவைகளைக் கூடப் பின்பற்றவில்லை என்பதை சமீபத்திய உண்மைகள் காட்டு கின்றன. வாக்களிக்கும் உரிமையை, உள்துறை அமைச்சகத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய குடியுரிமையுடன் இணைக்கும் கூடுதல் முயற்சியால், ‘எஸ்ஐஆர்’ ஒரு மிகப்பெரிய பாகுபாடு காட்டும் நடவடிக்கையாக மாறி யுள்ளது என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டு கின்றன. எந்தச் சட்டமும் இல்லை, எந்த விதியும் இல்லை, ஆனால் அமித் ஷாவின் ‘கண்டறி, நீக்கு மற்றும் நாடு கடத்து’ (‘detect, delete and deport’) என்ற வாசகமே நிலையான செயல் பாட்டு நடைமுறையாக உள்ளது. உண்மையா கச் சொன்னால், நாம் மிகவும் மோசமான ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கி றோம். இஸ்ரேலின் இனப் படுகொலை - வெனிசுலாவை குறி வைக்கும் டிரம்ப் நம்மைச் சுற்றியுள்ள உலகம் பெரும் கொந்தளிப்புகளைக் கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் முழு ஆத ரவுடன் காசாவில் பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதைக் காண நேர்ந்தது. உண்மையில், காசாவிலிருந்து அரேபி யர்களை முற்றிலுமாக அழிப்பதே அந்த முயற்சி. ஆனால், உலகெங்கிலும் உள்ள மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நம்பிக்கை யூட்டுவதாக இருந்தது. இது, கடந்த காலத்தில் சியோனிச இஸ்ரேலுக்கு அனுதாபம் காட்டிய அரசாங்கங்களைக் கூட, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கச் செய்தது. ஆனாலும், மீறல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின் றன. நேதன்யாகுவும் அவரது கும்பலும் மனித குலத்திற்கு எதிரான தங்கள் குற்றங்களுக்காகப் பொறுப்பேற்க வைக்கப்படாவிட்டால், இது நீடிக்கும். மற்றொருபுறம், வெனிசுலா போன்ற நாடு களில் அமெரிக்கா புதிய சாகசங்களில் ஈடுபட முயற்சிக்கிறது. ஆனால் இங்கும், பலதுருவ உலகின் வளர்ந்து வரும் அறிகுறிகள் மற்றும் சீனாவின் உறுதிப்பாடுகள் காரணமாக, அமெ ரிக்காவின் ஒருதலைப்பட்சமான செயல்பாடு கடந்த காலத்தைப் போலத் தீர்க்கமானதாக இல்லை. டிரம்பின் வரிக் கொடுங்கோன்மை, அது நோக்கியிருந்த ஆதிக்கத்தை அடைவதில் தோல்வியடைந்துள்ளது. கவலைக்கிடமாகும் வங்கதேசம் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. சிறுபான்மையி னருக்கு எதிராக மட்டுமல்லாமல், 1971 விடுதலைப் போராட்ட வெற்றியின் பின்னர் தோன்றிய பகுத்தறிவின் அனைத்து அறிகுறி களுக்கும் எதிராகவும் அடிப்படைவாத ஆக்கிர மிப்பின் தெளிவான அறிகுறிகள் தென்படு கின்றன. இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலும், அடிப்படைவாத மற்றும் வகுப்புவாத சக்திகள் தீவிரமடைவது மட்டுமல்லா மல், மதச்சார்பற்ற ஜனநாயகங்களை பிற்போக்குத்தனமாக மத அடையாளத்தால் உந்தப்படும் பிரிவினைவாத தேசமாக மாற்றுவதற்காக, தேசிய அடையாளத்தை முழு மையாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சியே முன்னுக்கு வருகிறது என்பது தெளிவாகிறது. பரந்த ஒற்றுமை - தெளிந்த மாற்றுப்பாதை எனவே, 2026ஆம் ஆண்டு இன்னும் பெரும் சவால்களை முன்னிறுத்துகிறது. டிக்கன்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால், இது ‘நம்பிக்கையின்மையின் குளிர்காலம்’ (‘it is the winter of despair’)தான், ஆனாலும் ‘நம்பிக்கையின் வசந்தத்தை’ (‘the spring of hope’) நோக்கிப் பயணிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மக்களும் அவர்களின் பரந்த ஒற்றுமையும், உணர்வுப்பூர்வமான, வீரிய மிக்க போராட்டங்களும் இந்த மாற்றத்தை உறுதி செய்ய முடியும். இந்த பரந்த அடிப்படை யிலான ஒற்றுமையுடன், ஒரு மாற்றுப் பாதை குறித்த தெளிவும், அந்த ஒற்றுமையை நிலைநிறுத்தக்கூடிய பாதையில் பயணிப்பதும் அவசியம். 2025ஆம் ஆண்டுடன் கைவிடப்பட வேண்டிய அனைத்தையும் கைவிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதற்கான வழியில் மக்கள் ஒரு முக்கிய இணைப்புச் சங்கிலியாக உள்ளனர். தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் மற்ற அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் முழு மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை யால் அழைப்பு விடுக்கப்பட்டு, சம்யுக்தா கிசான் மோர்ச்ர்ச்சாவால் ஆதரிக்கப்படும் 2026 பிப்ரவரி 12 அன்று நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு, இத்த கைய மாபெரும் போராட்டங்களுக்குப் புதிய வழிகளைத் திறக்கும் சக்தி கொண்ட பரந்த ஒற்று மையை உருவாக்குவதற்கான ஓர் உறுதியான வாய்ப்பாக அமைந்திடும். டிசம்பர் 24, 2025, தமிழில் : ச.வீரமணி