புதுச்சேரியில் திமுகவுடன் பேச்சு நடத்த
6 Mar 2026, 3:17 pm
<p><strong>புதுச்சேரியில் திமுகவுடன் பேச்சு நடத்த</strong> </p>
<p>காங்கிரஸ் குழு அமைப்பு புதுச்சேரி, மார்ச் 6- தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சு வார்த்தை இறுதியடைந்துள்ள நிலையில், புதுச்சேரியிலும் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் திமுகவுடன் பேச மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவும், புதுச்சேரியில் காங்கிரஸும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும். கூட்டணியில் தியாகம் இல்லாவிட்டால் வெற்றி இல்லை. ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள், பேசித் தீர்வு காண்போம்,” என்றார்.\</p>
