மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க...
9 Apr 2026, 5:30 am

மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க...

தருமபுரி, ஏப்.9- மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென அரூர் தொகுதி வேட்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அ.சண்முகம், தீவட்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மொரப்பூர், செம்மாண்டப்பட்டி, நரியப்பள்ளி, கோட்டப்பட்டி, வேப்பநத்தம், அம்பேத்கர் நகர், அண்ணா நகர், எத்தியூர் நகர், செம்மாண்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3000 மதிப்பில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். நரியப்பள்ளி, கோட்டப்பட்டி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கப்படும், என்றார்.

இதில் திமுக ஒன்றியச் செயலாளர் கோ.சந்திரமோகன், தேர்தல் பொறுப்பாளர் குமார் தபாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.