முந்தய பக்கம்

பட்டியலின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து தீஒமு ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 11:23 pm
பட்டியலின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து தீஒமு ஆர்ப்பாட்டம்

பட்டியலின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து தீஒமு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூன் 5- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், நெட்டூர் கிராமத்தில் திருமண வீட்டில் புகுந்து பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி யதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். அ.ராமலிங்கம் தலைமையில் செங்கல் பட்டு, பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதிக்க சாதிவெறி குற்றவாளிகள் அனைவரையும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி கிராமத்தைவிட்டு அகற்றிட வேண்டும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தீர்வும் உதவியும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர். கே.வாசுதேவன், ததீஒமு மாவட்டத் தலைவர் இ.சங்கர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். முன்னணியின் மாநில மதிப்புறுத் தலைவர். எஸ்.கே.மகேந்திரன் நிறையுரையாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram