தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைச்சரிடம் கோரிக்கை மனு

1 hour before
தீண்டாமை ஒழிப்பு முன்னணி   அமைச்சரிடம் கோரிக்கை மனு
<p><strong>தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைச்சரிடம் கோரிக்கை மனு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 10- நில உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட நிர்வாகி கள் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்தச் சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் பட்டிய லின மக்கள் சந்தித்து வரும் நிலம் தொடர்பான பிரச்சனைகளை நிர்வாகி கள் அமைச்சரின் கவன த்திற்குத் தகுந்த ஆதாரங்க ளுடன் கொண்டு சென்றனர். குறிப்பாக, உளுந்தூர் பேட்டை வட்டம், மார னோடை கிராமத்தில் வசிக்கும் 54 குடும்பங்க ளுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கையை நிறைவேற்றி, அவற்றை உரிய முறையில் கிராம கணக்கில் பதிவு செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வானாபுரம் வட்டம், அத்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த பிரச்சனையைச் சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், ஆக்கிரமிப்பில் இருக்கும் அந்த நிலங்களை முறை யாக மீட்டு, உரிய பயனா ளிகளான பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட றிந்த அமைச்சர் வன்னி யரசு, மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள நிலங் கள் மற்றும் கிராமங்களில் உள்ள சூழலை விரிவாக ஆய்வு செய்வதாகவும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்ப தாகவும் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் வே. ஏழுமலை, மாவட்டச் செயலாளர் டி.எஸ். மோகன், பொருளாளர் கே. பாஸ்கர், மாவட்டத் துணைத் தலைவர் அ.பா. பெரிய சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் டி. வெங்கடே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.