பொது இடங்களில் கால்நடைகளை பலியிடுவதை தடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்ப்பு
31 May 2026, 11:25 pm
<p><strong>பொது இடங்களில் கால்நடைகளை பலியிடுவதை தடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்ப்பு</strong></p><p>திருப்பத்தூர், மே 31- திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள யாத்திரி நிவாஸ் அரங்கில் கடந்து 29, 30-ம் தேதிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில குழு கூட்டம் மற்றும் பயிலரங்கம் மாநில தலைவர் செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குபேந்தி ரன் வரவேற்புரை ஆற்றினார். இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய துணைத் தலைவர் சாமுவேல் ராஜ், சிறப்புத் தலைவர் மகேந்திரன், மாநில தலைவர் செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, பொருளாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை நாட்களில் அரசு அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாடு், ஒட்டகம், ஆடுகளை பலியிட வேண்டும், மற்ற இடங்களில் பலியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது இதை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இறுதியில் மாவட்ட தலைவர் காத்தவ ராயன் நன்றி கூறினார்.</p>
