தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க நடப்பு அமர்விலேயே சட்டம் இயற்றுக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!

17 Jun 2026, 9:45 pm
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க நடப்பு அமர்விலேயே சட்டம் இயற்றுக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க நடப்பு அமர்விலேயே சட்டம் இயற்றுக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!

சென்னை, ஜூன் 17 - சாதி ஆணவக் கொலை களைத் தடுக்கவும், சாதி - மத மறுப்பு இணையர் களுக்குப் பாதுகாப்பு வழங்க வும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வலி மையான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் த. செல்லக் கண்ணு, பொதுச்செயலா ளர் பி. சுகந்தி ஆகி யோர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். “கடந்த இரண்டு மாதங் களில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 5 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

தற்போதைய குற்றவியல் சட்டங்கள் இத னைத் தடுக்கப் போத வில்லை. திருமண வயதை எட்டியவர்களின் இணையத் தெரிவு சுதந்திரத்தைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் அவசியமாகும். இந்தியச் சட்ட ஆணையத்தின் 242- ஆவது அறிக்கை (2012) மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் இத்தேவையை உறுதிப்படுத் தியுள்ளன.

இக்கோரிக்கைக் காகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 15 ஆண்டு களாகப் போராடி வரு கிறது. சிறப்புச் சட்டம் இயற்று வதைக் கொள்கையளவில் ஏற்று, முந்தைய அரசு 2025 அக்டோபர் 17 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலித் அமைப்பு களும், சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்களும் இணைந்து வலுவான சட்டப் பரிந்துரைகளை இந்த ஆணையத்திடம் வழங்கி யுள்ளனர். எனவே, நீதிபதி பாஷா ஆணையத்தின் அறிக் கையை விரைந்து பெற்று, தவெக அரசு தனது முதல் சட்டமன்றக் கூட்டத் தொட ரிலேயே இதற்கான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கான அறிவிப்பை ஆளுநர் உரையில் வெளி யிட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.