இராமநாதபுரத்தில் தமுஎகச புத்தக வாசிப்பு இயக்கம்
yesterday
<p><strong>இராமநாதபுரத்தில் தமுஎகச புத்தக வாசிப்பு இயக்கம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 21- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் நான்காவது புத்தக வாசிப்பு இயக்கம், இராமநாதபுரம் அரசு ஊழி யர் சங்க அலுவலகக் கட்டி டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் பேரா.வா.ஸ்டாலின் தலை மை வகித்தார். திருப்புல் லாணி கிளை துணைச் செய லாளர் ம.மரியசூசை, துணைத் தலைவர் இரா.தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கிளைச் செயலாளர் மா.ரமேஷ்குமார் வரவேற்பு ரையாற்றினார். எழுத்தாளர் மு.முரு கேஷ் எழுதிய “கட்டை விர லின் கதை” நூல் குறித்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்டோர் தங்க ளது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, பங்கேற்பாளர்களின் கருத்து களை தொகுத்து, மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறி ஞர் எஸ்.சந்திரசேகரன் நெறி யுரையாற்றினார். நிகழ்ச்சியில் எழுத்தா ளர் மு.முருகேஷ் ஏற்புரை யாற்றினார். இறுதியில், திருப்புல்லாணி கிளைப் பொருளாளர் கி.முத்துச்சாமி நன்றி கூறினார்.</p>
