தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரவிச்சந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

31 May 2026, 9:59 pm
அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரவிச்சந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரவிச்சந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருவில்லிபுத்தூர், மே 31- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் திரு வில்லிபுத்தூர் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த ஏ.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பணி நிறைவு பெற்றார். இதை யொட்டி கிளை நிர்வாகம் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் கிளை நிர் வாகம் மற்றும் தொழிலா ளர்கள் இணைந்து பணி நிறைவு பெற்ற ரவிச்சந்தி ரனை பாராட்டினர். நிர்வா கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு சான்றிதழ், நினை வுக் கேடயம், கடிகாரம் உள் ளிட்ட நினைவுப் பரிசுகளை புதிய கிளை மேலாளர் முத்துக்குமார் வழங்கினார். இந்த நிகழ்வில் திரு வில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ரவிச் சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். விழாவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் சிஐடியு சங்க கிளை நிர்வாகி கள் ராஜா, தென்னரசு, சம் மேளனக் குழு உறுப்பினர் முனீஸ்வரன், ரேவா அமைப்பின் மரியடேவிட், ஏஐடியுசி கிளை நிர்வாகி சோமசுந்தரம், அண்ணா தொழிற்சங்கத்தின் பார்த்தி பன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அலுவலகப் பணியா ளர்கள் கலந்து கொண்ட னர். இறுதியாக பணி நிறைவு பெற்ற ரவிச்சந்திரன் ஏற் புரை வழங்கினார். புதிய கிளை மேலாளர் முத்துக் குமார் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.