தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியாரை மிஞ்சிய அரசுப்பேருந்துகள் ‘சிறப்புப் பேருந்து’ என்ற பெயரில் பகற்கொள்ளை!

1 Jul 2026, 1:30 am
தனியாரை மிஞ்சிய அரசுப்பேருந்துகள் ‘சிறப்புப் பேருந்து’ என்ற பெயரில் பகற்கொள்ளை!
<p><strong>தனியாரை மிஞ்சிய அரசுப்பேருந்துகள் ‘சிறப்புப் பேருந்து’ என்ற பெயரில் பகற்கொள்ளை!</strong></p><p>“டீசல் விலை உயர்வைக் கார ணம் காட்டி, கோவை - ஈரோடு வழித்தடத் தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாகக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” குறித்து திங்களன்று நமது தீக்கதிர் நாளி தழில் விரிவான செய்தி வெளியிட்டி ருந்தோம். அச்செய்தியைக் கண்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த நமது தீக்கதிர் வாச கர் அன்பழகன் என்பவர், அரசுப் பேருந்துகளிலும் நடக்கும் கட் டணக் கொள்ளையை ஆதாரத் தோடு அம்பலப்படுத்தியுள்ளார். அரசுப் பேருந்துகளிலேயே எவ் வித அறிவிப்பும் இன்றி, ‘சிறப்புப் பேருந்து’ என்ற பெயரில் அரங் கேறும் இந்தக் கட்டணக் கொள்ளை பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. அன்பழகன் தனது குடும்பத்தி னருடன் கடந்த ஞாயிறன்று மேட்டூரி லிருந்து மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒரு நபருக்குக் கட்டணமாக ரூ. 60 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்று மாலை அதே மேட்டூருக்குத் திரும்ப அரசு பேருந்தில் ஏறிய போது, ஒரு நபருக்கு ரூ. 75 என அதிரடியாக கட்டணம் வாங்கப்பட் டுள்ளது. இதுகுறித்து நடத்துநரிடம் அவர் காரணம் கேட்டபோது, “கூட் டம் அதிகமாக இருப்பதால் வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய பேருந்தை மாற்றி இங்கு இயக்கு கிறோம். அதனால் ரூ. 15 கூடுதல் கட்டணம்” என்று பதிலளித்துள்ள னர். ஏழை எளிய மக்கள் நம்பியி ருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகமே இப்படித் தன்னிச்சை யாகக் கட்டணக் கொள்ளையில் ஈடு பட்டால், அப்புறம் தனியார் பேருந்துகளை எப்படிக் கட்டுப்ப டுத்த முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக செயற்பாட் டாளர்கள் கூறுகையில், “தனியார் பேருந்துகள் லாப நோக்கத்திற் காகச் செய்வதை, மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகமே ‘சிறப்புப் பேருந்து’ என்ற போர்வையில் பய ணிகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறிப்பபது அநீதியானது. அத்தியாவசியச் சேவையான பொதுப் போக்குவரத்தில் இப்படித் திடீரெனக் கட்டணங்களை உயர்த் துவது ஏழை மற்றும் நடுத்தர மக்க ளின் மாதாந்திர பட்ஜெட்டைக் காலி செய்துவிடும்” என வேதனை தெரி விக்கின்றனர். தனியார் பேருந்துகளின் தன் னிச்சையானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தில் இருக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், முதலில் அரசுப் பேருந்துகளில் ‘கூட்ட நெரிசல்’ மற் றும் ‘ரூட் மாற்றம்’ என்ற பெயரில் நடத்தப்படும் கூடுதல் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் போக்குவரத்துத் துறை அதி காரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கட்டண முறைகேடுகளை கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பயணிகளின் எதிர் பார்ப்பாகும். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரி சலை பயன்படுத்தி, எவ்வித முன் அறிவிப்போ, அரசாணையோ இன்றி அரசுப் பேருந்துகளிலேயே கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. ‘சிறப்புப் பேருந்து’ என்பது மக்க ளுக்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் பாக்கெட்டை பறிப்பதற்கல்ல என்பதைப் போக்கு வரத்து துறை உணர வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.