பணி ஓய்வு பாராட்டு விழா
30 May 2026, 10:16 pm
<p><strong>பணி ஓய்வு பாராட்டு விழா</strong></p><p>தேனி, மே 30- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக திண்டுக்கல் மண்டலத்தில் 39 ஆண்டு காலம் பராமரிப்பு பிரிவில் பணி புரிந்து வந்த ஏ.முருகவேலுக்கு சிஐடியு சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் என்.ராமநாதன் தலைமை வகித்தார். முருக வேலின் இணையர் சித்ரா வர வேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பால பாரதி, சிஐடியு அரசு போக்கு வரத்து கழக சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் எம்.இராமச்சந்திரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். திண்டுக்கல் மண்டல தலை வர் ஐ.ஜெயக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.சண் முகம், ஆட்டோ தொழிலாளர் சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் எம்.சந்திரசேகர், சிஐடியு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திண்டுக்கல் மண்டல தலைவர் சி.பாலச்சந்திரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.ராஜப் பன், முன்னாள் மாவட்டச் செய லாளர்கள் டி.வெங்கடேசன், ஏ.வி.அண்ணாமலை, சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலா ளர் சி.முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெய பாண்டி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் சு.வெண்மணி, சிஐடியு மூத்த தலைவர் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரத்தை கே. ஆறுமுக நயினாரிடம் ஏ.முருக வேல் வழங்கினார்.</p>
