முந்தய பக்கம்

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு

48 minutes before
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு

தருமபுரி, நவ. 15-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட நேரடி நியமனத்திற்கான ஒருங்கிணைந்த கூட்டுத் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான (பட்டயப் படிப்பு / ஐ.டி.ஐ. நிலை) தேர்வு தருமபுரி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வை எழுத மொத்தம் 1,886 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 1,180 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

706 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வர்களின் வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 6 தேர்வு மையங்களிலும் தேர்வு எவ்வித இடையூறுமின்றி அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram