டிஎன்பிஎஸ்சி 461 காலியிடங்கள்
27 May 2026, 9:09 pm

டிஎன்பிஎஸ்சி 461 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC (Combined Technical Services Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வு மூலம் பல்வேறு துறைகளில் மொத்தம் 461 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு ஏற்ப பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – ஜூலை 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினர்கள் 35 வயது வரையும், எஸ்சி / எஸ்டி பிரிவினர்கள் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் – விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC One Time Registration முறையில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 25, 2026 ஆகும்.